Wednesday, February 27, 2013

சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...



குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் சிலர் குழந்தையை தாமதமாக பெற்றுக் கொள்ளலாம் என்று இருப்பார்கள். ஆனால் பலர் குழந்தையை சீக்கிரம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். இதற்காக மருத்துவரிடம் கூட சென்றிருப்பார்கள். இருப்பினும் குழந்தையை சீக்கிரம் பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும். இதற்கு காரணம் பொறுமை இல்லாதது தான்.

எனவே அவ்வாறு குழந்தையை சீக்கிரம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுபவர்களுக்கு, ஒரு சில ஈஸியான முறைகளை அனுபவசாலிகளிடம் கேட்டு, பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் நடந்து, அழகான குழந்தையைப் பெற்று மகிழுங்கள்.

* கர்ப்பமாவதற்கு, சரியான மாதவிடாய் சுழற்சி இருக்க வேண்டும். அவ்வாறு சரியான மாதவிடாய் சுழற்சி இல்லாமல் இருந்தால், அது இனப்பெருக்க மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மாதவிடாய் சுழற்சியை சீராக வைப்பதற்கு, அதற்கேற்ற உணவுகளை முதலில் சாப்பிட வேண்டும்.

* கர்ப்பமடைவதற்கு ஓவுலேசன் தான் சரியான நேரம். எனவே விரைவில் கர்ப்பமடைய வேண்டுமெனில், ஓவுலேசன் நாட்களை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முயற்சி செய்தால், நிச்சயம் கர்ப்பமடைய முடியும்.

* ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இவை தான் கர்ப்பமடைவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும் ஃபோலிக் ஆசிட் குறைவாக இருப்பதால் தான் கருச்சிதைவு ஏற்படுகிறது. ஆகவே ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ள உணவுகளான பச்சை இலைக் காய்கறிகள், பருப்பு வகைகள், சிட்ரஸ் பழங்கள், காராமணி, ப்ராக்கோலி மற்றும் தானியங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், கர்ப்பமடைவதற்கான வாய்ப்பானது அதிகரிக்கும்.

* தினமும் உறவில் ஈடுபடுவதை விட, இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொண்டால், விந்தணு ஆரோக்கியமாக இருக்கும். மேலும் எந்த நிலையில் உறவு கொண்டால், விந்தணு எளிதில் கருப்பையை அடையும் என்பதையும் தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்வது நல்லது.

* அதிக உடல் எடை கூட கர்ப்பத்திற்கு தடை ஏற்படுத்தும். எனவே தினமும் உடல் எடையை சீராக வைக்கும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, உடல் எடையை குறைவதோடு, உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமின்றி, சீரான இரத்த ஓட்டமும் கர்ப்பமாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

இவற்றையெல்லாம் சரியாக தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் விரைவில் கர்ப்பமாக முடியும்.

Read more at: http://tamil.boldsky.com/pregnancy-parenting/basics/2013/how-get-pregnant-within-month-002725.html

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!