Monday, October 15, 2012

பாரம்பரிய சின்னமாகிறது கோட்டை : யுனெஸ்கோ விரைவில் அறிவிப்பு

பாரம்பரிய சின்னமாகிறது கோட்டை : யுனெஸ்கோ விரைவில் அறிவிப்பு






பாரம்பரியமிக்க பண்டைய கலை கலாசார படைப்புகளை பார்வையிட மத்திய நகர்ப்புற வீட்டுவசதி, வறுமை ஒழிப்பு மற்றும் கலாசார துறை அமைச்சர் குமாரி செல்ஜா தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தார். நேற்று காலை அவர் கும்பகோணம் மகாமக குளத்தை பார்வையிட்டார். பின்னர் திருபுவனம் திகோ சில்க்ஸ் பட்டு சேலை உற்பத்தி செய்யும் நெசவு கூடத்துக்கு சென்றார்.

பின்னர் நிருபர்களிடம் செல்ஜா கூறியதாவது: தஞ்சை பெரிய கோயில், அரண்மனை, சங்கீத மகால், சரஸ்வதி மகால் நூலகத்தை பார்வையிட்டேன். சோழர் கால சிற்பங்கள் மிகவும் அற்புதமாக உள்ளன. இவற்றை போற்றி பாதுகாக்க வேண்டும். தென்னகத்தின் கும்பமேளா என போற்றப்படும் கும்பகோணம் மகாமக குளத்தில் பலர் துணிகளை துவைப்பது, படுக்கை பாய்களை துவைப்பது என குளத்தை அசுத்தப்படுத்தி வருகின்றனர். குளத்தின் பெருமையை போற்றி பாதுகாக்க மக்களே முன்வர வேண்டும்.

சுவாமிமலையில் வடிவமைக்கப்படும் ஐம்பொன் சிலைகள் ஆயிரம் ஆண்டுகளை கடந¢து இன்றும் பெருமை பெற்றுள்ளது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை, மகாபலிபுரம் புலிக்காடு ஏரி, சங்கரன்கோவில் கழுகுமலை, ஸ்ரீரங்கம் கோயில், செட்டிநாடு பங்களா ஆகியவற்றை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது இவ்வாறு செல்ஜா கூறினார். தொல்பொருள் ஆய்வு துறை சென்னை மண்டல கண்காணிப்பாளர் சத்யபாமா பத்ரிநாத், உலக பாரம்பரிய சின்ன ஆலோசனை குழு உறுப்பினர் ஸ்டீவ் போர்ஷா உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!