Wednesday, October 17, 2012

உலகில் பணக்காரர்கள் மிகுந்த நாடு சுவிட்சர்லாந்து

உலகில் பணக்காரர்கள் மிகுந்த நாடு சுவிட்சர்லாந்து




சுவிட்சர்லாந்தில் சென்ற ஆண்டு முதல் தனியாரின் சொத்து விகிதம் 13 சதவீதமாகக் குறைந்திருந்தது. ஆனாலும் கூட, உலகில் அதிக பணக்காரர்கள் வாழும் நாடாக சுவிட்சர்லாந்து விளங்குவதாக கிரெடிட் சுவிஸ் வெளியிட்ட வருடாந்திர உலகளாவிய சொத்து அறிக்கை தெரிவித்துள்ளது.

சுவிஸ் ஃபிராங்கின் மதிப்பு உயர்ந்திருந்ததால் நாட்டின் சொத்து மதிப்பும் உயர்ந்திருந்தது. இதனால் சுவிட்சர்லாந்து பணக்கார நாடுகளின் வரிசையில் இடம்பெறுவது எளிதாயிற்று.

ஒரு நபருக்கான சொத்து மதிப்பு 439,874 சுவிஸ் ஃபிராங்க் ஆகும். டொலரில் கணக்கிட்டால் அதாவது 468,000 டொலர் ஆகும். 2000ம் ஆண்டின் தனிநபர் வருமானத்தை விட இது இரண்டு மடங்கு ஆகும்.

2001 மற்றும் 2002ம் ஆண்டுகளில் சொத்து மதிப்பு குறைந்த போதும் கூட அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. முதல் பத்து உலகப் பணக்கார நாடுகளில் எட்டு நாடுகள் தனது தனிநபர் சொத்து மதிப்பில் 4 முதல் 17 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. அமெரிக்காவும் ஜப்பானும் மட்டுமே சிறிதளவு அதாவது 1 சதவீதம் உயர்ந்து காணப்பட்டன.

மேலைநாடுகளில் சொத்து மதிப்பு சரிந்ததற்குக் காரணமாக யூரோ மண்டலத்தில் ஏற்பட்ட நெருக்கடி, குறைந்த வட்டி விகிதம் போன்றவற்றைக் கூறலாம்.

உலகில் முதன்முறையாக ஆசிய நாடுகள் சில இந்தப் பணக்கார நாடுகளின் வரிசையில் இடம் பெற்றன. இந்த நாடுகளின் நிகர வீட்டு வருமானம் 7.1 டிரில்லியன் டொலராகும். ஐரோப்பாவில் கடந்த யூன் 30ம் திகதி முடிவு பெற்ற நிதியாண்டுக் கணக்கின்படி அங்குள்ள நிகர வீட்டு வருமானம் முன்பு இருந்ததை விட 14 சதவீதம் குறைந்து 69.3 டிரில்லியனாகி விட்டது.

பணக்காரர்கள் வசிக்கும் முதல் பத்து நாடுகளில் நார்வே, லக்ஸர்பெர்க், ஃபிரான்ஸ், பிரிட்டன், ஸ்வீடன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!