Monday, October 15, 2012

வானிலை ஆய்வு மையம் தகவல் 18 ,19 ல் வடகிழக்குப் பருவமழை துவங்கும்

வானிலை ஆய்வு மையம் தகவல் 18 ,19 ல் வடகிழக்குப் பருவமழை துவங்கும் 



தமிழகத்தில் அக்டோபர் 18 அல்லது 19 ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களில் முதலில் வடகிழக்குப் பருவமழை துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஓரிரு நாளில் தென் மேற்குப் பருவ மழை முடிவுக்கு வரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபரில் துவங்கும் வடகிழக்குப் பருவ மழை டிசம்பர் வரை நீடிக்கும். வடகிழக்குப் பருவ மழை காலத்தில் தான் தமிழகத்திற்கு அதிக மழை கிடைக்கும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!