Monday, December 10, 2012

பெண்களுக்கு நகை மேல் ஆசை வந்தது எப்போதிலிருந்து ?

பெண்களுக்கு நகை மேல் ஆசை வந்தது எப்போதிலிருந்து ? 


ஜேர்மன் நாட்டில் உள்ள கேல் என்னும் நகரில், மிகப் பழமைவாய்ந்த எலும்புக்கூட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிறீஸ்த்து பிறந்ததாகச் சொல்லப்படும் ஆண்டுக்கு சுமார், 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களுடைய எலும்புக் கூட்டுத் தொகுதியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நிலத்தில் புதைக்கப்படும் மனிதர்களது உடல், உக்கி பின்னர் மண்ணோடு மண்ணாகிவிடுகிறது. இருப்பினும் எகிப்த்து போன்ற நாடுகளில், இறந்த முக்கியமான நபர்களது உடலை அவர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் பாதுகாத்து வந்துள்ளார்கள். அதேபோல, சமீபத்தில் ஜேர்மன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலும்புக்கூடுகள் பழுதடையாமல் காணப்படுவது மிக அதிசயமான ஒன்றாகும். ஆனால் அவற்றில் காணப்படும் ஆபரணங்கள், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் பெண்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதனை எமக்கு எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.

பெண்களுக்கு ஆபரணங்கள் மீது கொள்ளை ஆசை இருக்கிறது என்று பலர் கூறுவார்கள். சிலர் அதனை விவாதிப்பார்கள். ஆனால் உண்மையிலேயே பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, பெண்களுக்கு ஆபரணங்கள் மீது ஒரு ஆலாதிப் பிரியும் உள்ளது என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக இந்த எலும்புக்கூடுகள் திகழ்கின்றன. குறிப்பிட்ட இந்த எலும்புக்கூடு ஒரு பெண்ணுடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவர் தலையில் பித்தளையினால் ஆன ஆபரணம் ஒன்றை அணிந்துள்ளார். அதுமட்டுமா ? வேறு சில ஆபரணங்களையும் அவர் இடையில் அணிந்துள்ளார்.


அவர் இறந்த பிற்பாடு, அந்த ஆபரணங்களை களற்றாது, அவர் உடலை சிலர் புதைத்திருக்கிறார்கள். ஆனால் அதிஷ்டவசமாக இவர் உடல் இயற்கையால் பாதுகாக்கப்பட்டுள்ளது. தேன் மற்றும் மரங்களில் இருந்து கசியும் பிசின் போன்றவை உடலை உக்கவிடாமல் பாதுகாக்கும் திறன் கொண்டவை என புராதன காலத்தில் கண்டுபிடிக்கப்படது. தமிழர் கலாச்சாரத்தை பொறுத்தவரை , தமிழர்க இறந்தவர்களின் உடலை எரிப்பது வழக்கம். இதன் காரணமாக , தமிழர் கலாச்சாரம் மிகத் தொன்மையானதாக இருந்தாலும், குழிகளில் இருந்து தோண்டி எடுக்கும் அளவுக்கு பண்டைய தமிழர்களின் உடல்கள் இல்லை. அப்படி இருந்திருந்தால் தமிழர்கள் நாகரீகம் குறித்து நாம் மேலும் பல தகவல்களைப் பெற்றிருக்க முடியும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!