Monday, April 1, 2013

iPad Mini ட்ரேட்மார்க் உரிமம் நிராகரிப்பு! Apple வைத்த பெயர் பொருத்தம் இல்லையாம்!!

iPad Mini ட்ரேட்மார்க் உரிமம் நிராகரிப்பு! Apple வைத்த பெயர் பொருத்தம் இல்லையாம்!!



ஆப்பிள் நிறுவனத்துக்கு மற்றொரு சிக்கல். iPad Mini தயாரிப்புக்கு ட்ரேட்மார்க் உரிமம் வழங்க முடியாது என, உரிமம் வழங்கும் அமெரிக்க அலுவலகம் (US Patent and Trademark Office) ஆப்பிள் நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது.

“iPad Mini என்ற பெயருக்கும், அந்த பொருளுக்கும் சரியான பொருத்தம் கிடையாது” என்பதே, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதன் காரணம்.

ஆனால், ஆப்பிள் நிறுவனத்துக்கு வரும் ஜூலை மாதம்வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கிடையே, தமது தயாரிப்புக்கு iPad Mini என்ற பெயர் எப்படி பொருத்தமானது என்பதை ஆப்பிள் நிரூபித்துவிட்டால், ட்ரெட்மார்க் உரிமம் கிடைக்கும்.

இதை வேறு விதமாக சொல்வதானால், iPad என்பதில் இருந்து iPad Mini எந்த வகையில் வேறுபடுகிறது என்பதை ஆப்பிள் நிரூபிக்க வேண்டியிருக்கும். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது என்பதுதான், இதிலுள்ள சிக்கல்.

கடந்த ஜனவரியில் முடிவடைந்த காலாண்டு பகுதியில் ஆப்பிள், 22.9 மில்லியன் iPads மற்றும் iPad Minis விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது.



Read more: http://viruvirupu.com/apple-ipad-mini-united-states-office-50916/#ixzz2PBh1oh6X

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!