Thursday, September 6, 2012

கல்லறையில் கியூ.ஆர் கோட் வருகிறது !


கல்லறையில் கியூ.ஆர் கோட் வருகிறது !




கியூ. ஆர் கோட்(QR CODE) அப்படி என்றால் என்ன என்று வாயைப் பிளக்கவேண்டாம். பாக் கோட்(BARCODE) பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதாவது நாம் வாங்கும் பொருட்களில் எல்லாம் தற்போது சர்வசாதாரணமாகக் காணப்படுவது பாக்-கோட். கணணியானது ஒரு பொருளின் விலையை மற்றும் என்ன பொருள் என்று அறிய இந்த பாக்-கோட் பயன்படுகிறது. நீள் கோடுகளாக அமைந்துள்ள இந்த பாக்-கோட்டில் பல விடையங்களைப் பதிவுசெய்ய முடியாது. இதன் காரணமாக 3வது தலைமுறையினர், கியூ-ஆர் கோட்டைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த கியூ-ஆர் கோட் வாசிக்கும் திறன் உங்கள் மோபைல் போனில் உள்ளது. இல்லை என்றால் நீங்கள் அதனை தரவிறக்கம் செய்து இன்ஸ்டோல் செய்யலாம். இந்த கியூ-ஆர் கோட்டில் பல விடையங்களை நாம் பதிந்து வைத்துக்கொள்ள முடியும். அதாவது கியூ-ஆர் கோட் உருவாக்கும், இணையத்தில் நாம் எதனை எழுதுகிறோமோ அவ்வளவற்றையும் எழுதிவிட்டு பின்னர் நாம் கியூ-ஆர் கோட்டை உருவாக்கும் பட்டனை அழுத்தினால் போதும்.




உடனே கியூ-ஆர் கோட் உருவாகிவிரும். அதனை நாம் பதிவில் எடுக்கலாம். இல்லையேல் பிரின் போடலாம். பின்னர் அதனை மோபைல் போனில் உள்ள கமராவின் உதவியோடு ஸ்கேன் செய்தால், நாம் எழுதிய அனைத்து விடையங்களும் மோபைல் போன் திரையில் விழும். சுருக்கமாகச் சொல்லப்போனால், புள்ளிப் புள்ளியாக இருக்கும் இந்த கியூ-ஆர் குறியீடுகள் ஒரு செக்கனில் எழுத்துகளாக மாறிவிடும். தற்போது இதனைக் கல்லறையிலும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். வழமையாக கல்லறையில் ஒருவர் புதைக்கப்பட்டால் அவரது கல்லறையில் அவர் எப்போது பிறந்தார் எப்போது இறந்தார் என்று மட்டும் எழுதுவது உண்டு. ஆனால் தற்போது இந்தக் கியூ ஆர் கோட்டை கல்லறையில் பதிக்கிறார்கள். என்ன ஒரு ஐடியா



இனி நீங்கள் மயாணத்துக்குச் செல்லும் போது, அங்கே காணப்படும் பல கல்லறைகளில் உள்ள கியூ-ஆர் கோட்டை உங்கள் கைகளில் உள்ள மோபைல் போன் மூலம் ஸ்கேன் செய்தால் போதும். அக்கல்லறையின் கீள் புதையுண்ட நபர் குறித்த பல விடையங்களை தெரிந்துகொள்ளலாம். டெக்னாலஜி முன்னேறுகிறது தான் ! ஆனால் கல்லறைவரை முன்னேறிச் செல்வது தான் ஆச்சரியமான விடையம்.




No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!