Wednesday, September 5, 2012

ஆடைகளை தேர்வு செய்ய பெண்களை நாடும் ஆண்கள்


இங்கிலாந்தில் 50% பேர் இப்படித்தான்

ஆடைகளை தேர்வு செய்ய பெண்களை நாடும் ஆண்கள்


 


இங்கிலாந்தில் 50 சதவீத ஆண்கள் புது டிரஸ் எடுப்பதற்கும், இன்று எந்த டிரஸ் போடுவது என்று முடிவெடுக்கவும் காதலி, மனைவி அல்லது அம்மாவின் துணையை நாடுகின்றனர் என்று அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆள் பாதி, ஆடை பாதி என்பார்கள். இந்த ஆடைகளை தேர்வு செய்வதில், இங்கிலாந்தில் உள்ள ஆண்களுக்கு பெண்களே கைகொடுக்கின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தில் 1,000 ஆண்களிடம் ஆடைகள் தேர்வு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தெரிய வந்த சுவாரசியமான தகவல்கள்:

ஆய்வில் பங்கேற்றவர்களில் 50 சதவீதம் பேர் தங்களுடைய ஆடைகளை தேர்ந்தெடுப்பதற்கு பெண்களின் உதவியை நாடுவதாக தெரிவித்துள்ளனர். இதில் 25 சதவீதம் பேர் மனைவியிடம் கேட்பவர்கள். 4ல் ஒரு ஆண், தன்னுடைய காதலி அல்லது மனைவியிடம் ஆடையை தேர்வு செய்து தரச் சொல்பவர்கள். தங்கள் ஆடைகளை தாங்களே தேர்வு செய்பவர்கள் வெறும் 6 சதவீதம் பேர் மட்டுமே. பெரும்பாலான ஆண்கள், அத்தி பூத்தாற்போல் எப்போதாவது தங்கள் ஆடைகளை தாங்களே தேர்வு செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

இன்று என்ன டிரஸ் போட வேண்டும் என்பதை கூட பலர் தங்களுடைய மனைவி அல்லது அம்மாவிடம்தான் கேட்கிறார்கள். வீட்டை விட்டு புறப்படும் போது, தாங்கள் அணிந்துள்ள டிரஸ் நன்றாக உள்ளதா என்பதையும் அவர்களிடம் கேட்கிறார்கள்.

தானே ஆடையை தேர்வு செய்பவர்களில் 3ல் ஒருவர், அந்த ஆடை நன்றாக உள்ளதாக திருப்தியடைகின்றனர். ஆடைகளை பராமரிப்பது, பீரோக்களில் அழகாக அடுக்கி வைப்பது போன்றவைகளில் பெரும்பாலான ஆண்களுக்கு கவலையே இல்லை. அதே போல், பெரும்பாலானவர்கள் 2 நிமிடங்களில் ஆடை அணிந்து விடுவதாக தெரிவித்துள்ளனர். 25 சதவீதம் பேர், ஆடை அணிய தங்களுக்கு 20 நிமிடம் ஆகும் என்று கூறியுள்ளனர். இவ்வாறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!