Tuesday, September 4, 2012

நகங்களை பராமரிப்பதற்கு

நகங்களை பராமரிப்பதற்கு





நகங்கள் கைகளின் அழகில் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே அவற்றை பராமரிப்பது மிகவும் அவசியம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகத்தின் அழகை பிரதிபலிப்பதில் நகத்துக்கும் பங்கு உண்டு.

உடல் உள்ளுறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால் நகம் அதை வெளிக்காட்டி விடும். எனவே நகங்கள் பாதிக்கப்பட்டால், அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

நகங்களை முறையாக பராமரிக்க பலர் அக்கறை எடுத்து கொள்வது கிடையாது. வைட்டமின் சி குறைபாடு இருந்தால் நகங்கள் பாதிப்படையும்.

சில டென்ஷன் பார்ட்டிகளுக்கும் குழந்தைகளுக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். இது உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது. நகக்கணுக்களை நோய் கிருமிகள் அதிகம் தாக்கும். நகம் கடிக்கும் போது இந்த கிருமிகள் உடலுக்குள் செல்வதால் எளிதில் நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

உணவு சாப்பிடும் முன்பு கைகளை நன்கு கழுவ வேண்டும். பெண்கள் பாத்திரம் தேய்த்த பின்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ரசாயனங்கள் நகக்கணுக்களில் தங்கிவிட்டால் நகங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

அதேபோல் மலம் கழித்த பின்னரும் சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும். குழந்தை பருவம் முதலே இத்தகைய பழக்கங்களை வாடிக்கையாக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் நக பராமரிப்பில் தனிகவனம் செலுத்துவது அவசியம். கை நகங்களை போலவே கால் நகங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும்.

பெரும்பாலான நோய்தொற்றுகளுக்கு நகமே முக்கிய காரணமாக உள்ளது. எனவே நகங்களை முறையாக பராமரிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணலாம்.

பெடிக்யூர், மெனிக்யூர் என நகங்களை பராமரிக்க பிரத்யேக பராமரிப்பு முறைகளும் சாதனங்களும் உள்ளன. இதற்கென அழகு நிலையங்கள் இருந்தாலும் வீட்டிலேயே செய்து கொள்வதும் எளிது. வாரத்தில் 2 அல்லது 3 முறை இந்த பராமரிப்பு முறையை செய்து கொள்ளலாம்.

நகங்களில் அடிபட்டாலோ, சொத்தை, நகச்சுற்று போன்ற பாதிப்புகள் இருந்தாலோ மருத்துவ சிகிச்சை பெறுவதே பாதுகாப்பானது. மருத்துவ குணம் கொண்ட மருதாணி இலைகளை அரைத்து கைகளில் இடுவது நகங்களை பாதுகாப்பதோடு, உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

கடைகளில் பொடியாகவும், கூழாகவும் கிடைக்கும் மருதாணியில் மருத்துவ குணம் இருப்பதில்லை. தரமான நெயில் பாலிஷ்களை உபயோகிப்பது நகங்களுக்கு பாதுகாப்பானது.

அடிக்கடி நகக்கணுக்களில் மிருதுவான பிரஷ் அல்லது துணிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நகம் வெட்டும் போது சதைப்பகுதி பாதிக்கப்படாமல் கவனமாக வெட்ட வேண்டும். நகங்கள் சிலருக்கு உடைந்து போகும்.

இதற்கு கால்சியம் குறைபாடுதான் காரணம். உணவில் அதிகம் கால்சியம் சேர்த்துக் கொள்வதாலும் மருத்துவர் பரிந்துரையின் பேரில் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாலும் இந்த பாதிப்பு சரியாகும்.

சர்க்கரை நோயாளிகள் இதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். காய்கறிகள், பழங்கள் என ஊட்டச்சத்துள்ள சரிவிகித உணவு சாப்பிடுவதன் மூலம் நகங்களை பாதுகாக்கலாம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!