Friday, September 7, 2012

நீல் ஆம்ஸ்டிராங்கின் உடல் கடலில் புதைக்கப்படுகிறது


நீல் ஆம்ஸ்டிராங்கின் உடல் கடலில் புதைக்கப்படுகிறது



மறைந்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்டிராங்கின் உடல் கடலில் அடக்கம் செய்யப்படவுள்ளது. இதை அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்டிராங். அமெரிக்கரான ஆம்ஸ்டிராங், தனது 82வது வயதில் மரணமடைந்தார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சின்சினாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது அவரது மனைவி, பேரக் குழந்தைகள், குடும்பத்தினர், அவருடன் நிலாவுக்குச் சென்ற மைக்கேல் காலின்ஸ், பஸ் ஆல்டிரின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது ஆம்ஸ்டிராங்கின் உடல் கடலில் அடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்தனர். அமெரிக்காவில் கடற்படையில் பணியாற்றியவர்களின் உடல்கள் பொதுவாக கடலில்தான் அடக்கம் செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக சாதனையாளர்களின் உடல்களை கடலில் புதைப்பார்கள்.

ஆம்ஸ்டிராங்கும் ஆரம்பத்தில் கடற்படையில்தான் தனது பணியைத் தொடங்கினார். எனவே அவரது உடலையும் கடலிலேயே புதைக்கவுள்ளனர். இருப்பினும் எந்த இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது என்பது தெரிவிக்கப்படவில்லை.

இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் ஆம்ஸ்டிராங்கின் பேரக்குழந்தைகளில் ஒருவரான பைபர் வான் வேகனன் உருக்கமான உரை நிகழ்த்தினார்.

வாஷிங்டனில் செப்டம்பர் 12ம் தேதி ஆம்ஸ்டிராங்குக்கு இன்னொரு நினைவஞ்சலி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவரது உடல் அடக்கம் நடைபெரும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!