Thursday, August 23, 2012

இரகசியத் தகவல்களை கண்டறியும் புதிய மென்பொருள்

இரகசியத் தகவல்களை கண்டறியும் புதிய மென்பொருள்



சுவிட்சர்லாந்தில் லாசேனில் உள்ள மத்திய தொழில் நுட்பக்கல்லூரியின் ஆய்வாளர்கள், தவறான தகவல், வைரஸ் போன்றவற்றை இணையதளத்தில் பரவும்போது அவற்றின் மூலாதாரத்தை அறிவதற்கான வழிமுறைகளைக் கொண்ட மென் பொருளை கண்டறிந்துள்ளனர்.

இந்த மென்பொருள், வைரஸ் மூலங்களைக் கண்டுபிடிக்க உதவுகின்றது. ஒரு தகவல் வதந்தியாகப் பரவி வந்தாலும், பின்னோக்கிப் பயணித்து முதலில் அத்தகவல் எவரிடமிருந்து வெளியாயிற்று என்பதைக் கண்டுபிடிக்கும்.

இதனால் இம்மென்பொருள் புலனாய்வு அதிகாரிகளுக்கு "மதிப்பு மிகு கூட்டாளியாக" விளங்கும் என்று ஆய்வாளர் பெட்ரோ பிண்ட்டோ தெரிவித்தார்.

இந்த மென்கலம் பலமுறை பரிசோதனைக்கு பிறகு உருதிபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 2001 செப்டம்பர் 11 ம் திகதி அன்று உலக வர்த்தக மையத்தில் நடந்த தாக்குதலுக்கான திட்டமிடல் குறித்த விபரங்களை, இந்த மென்பொருளின் உதவியுடன் தேடியபோது மூன்று பேரை சந்தேகத்துக்கு இடமானவர் என காண முடிந்தது.

இம் மூவருள் ஒருவர் தான் இந்த வன்முறைத் தாக்குதலுக்கான குழுத்தலைவர் என்பது உறுதியாகியுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!