Thursday, August 23, 2012

செவ்வாய் கிரகத்திற்கு மீண்டும் விண்கலம் அனுப்பும் முயற்சியில் நாசா


செவ்வாய் கிரகத்திற்கு மீண்டும் விண்கலம் அனுப்பும் முயற்சியில் நாசா



செவ்வாய் கிரகத்தை ஆராய மீண்டும் விண்கலம் அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா முடிவு செய்துள்ளது.

முன்னதாக கடந்தாண்டு செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய கியூரியாசிட்டி ரோவரை அமெரிக்கா அனுப்பியது.

அத்திட்டம் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, இன்சைட் என்ற அடுத்த திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.


செவ்வாயின் மேற்பரப்பு குறித்தும், அதன் தள அமைப்பு பூமியைப் போல தகடுகளால் அமையாதது ஏன் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதன் மூலம் பூமிக்கு அடியில் எப்படி புவித் தகடுகள் அமைந்தன என்பதையும் கூடத் தெரிந்து கொள்ள முடியும்.

செவ்வாய் கிரகம் பற்றி இதுவரை நமக்குத் தெரியாத பல விஷயங்களை இன்சைட் திட்டம் தெளிவுபடுத்தும் என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!