Monday, August 20, 2012

பீரங்கிகளை தாக்கி அழிக்கும் நாக் ஏவுகணை சோதனை தோல்வி


பீரங்கிகளை தாக்கி அழிக்கும் நாக் ஏவுகணை சோதனை தோல்வி





பீரங்கிகளை தாக்கி அழிக்கும் நாக் ஏவுகணை சோதனை தோல்வி அடைந்ததால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராணுவத்தின் பயன்பாட்டுக்காக ஏவுகணை களை தயாரிக்க ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை கடந்த 1980களில் மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் எதிரி நாட்டு பீரங்கிகளை தாக்கி அழிக்கும் நாக் ரக ஏவுகணை களை தயாரிக்க ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப் பின்(டி.ஆர்.டி.ஓ) விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர். இதன்படி நாக் ரக ஏவுகணைகளை தயாரித்துள்ளனர். இதுவரை 50 முறை அந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணைகளை ராணுவத்தினர் பயன்படுத்தி சோதனை செய்யும் நிகழ்ச்சி ராஜஸ்தானில் உள்ள மகாஜன் துப்பாக்கி சுடும் மையத்தில் அண்மையில் நடந்தது. இதில், ராணுவ உயர் அதிகாரிகள், டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இதில்,மொத்தம் 4 நாக் ஏவுகணைகள் ஏவப்பட்டன. ஆனால், ஒரு ஏவுகணை மட்டுமே இலக்கை தாக்கியது. மற்ற ஏவுகணைகள் இலக்கை தாக்கவில்லை. இதனால், ஏவுகணையில் மாற்றங்கள் செய்யும்படி டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகளை ராணுவத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாக் ஏவுகணை சோதனை தோல்வி அடைந்ததால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்போது, பிரான்சில் இருந்து வாங்கிய மிலன் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை ராணுவம் பயன்படுத்தி வருகிறது. நாக் ஏவுகணையை ராணுவத்தில் சேர்ப்பது தாமதம் ஆவதால், அமெரிக்காவிடம் இருந்து ஜாவ்லின் ஏவுகணையை வாங்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாக் ஏவுகணையை ராணுவத்தில் சேர்க்க இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!