Wednesday, May 8, 2013

கூகுள் நிறுவனம் 5 பில்லியன் டாலரை ‘கைகழுவி தெளித்துவிட’ வேண்டிய நிலை!

கூகுள் நிறுவனம் 5 பில்லியன் டாலரை ‘கைகழுவி தெளித்துவிட’ வேண்டிய நிலை!



கூகுள் நிறுவனம் 5 பில்லியன் டாலர் பெறுமதியுள்ள உரிமத்தை கைகழுவி தெளித்துவிட வேண்டிய நிலை ஏற்படலாம் என்று சர்வதேச வர்த்தக வட்டாரங்களில் கூறப்படுகிறது. 5 பில்லியன் டாலர் பெறுமதியுள்ள இந்த உரிமத்தை, மோட்டரோலாவின் துணை நிறுவனம் (subsidiary) ஒன்றில் வைத்திருக்கிறது கூகுள்.

எதற்காக கைகழுவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது?

கூகுள் வாங்கி வைத்துள்ள இந்த உரிமம், ஐரோப்பாவில் மோட்டரோலாவின் மொபைல் விற்பனையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சப்ஸ்டிரரி, ஐரோப்பாவில் வழக்கு ஒன்றில் சிக்கிக் கொண்டுள்ளது.

ஜெர்மனியில் ஆப்பிளின் ஐ-போன் விற்பனையை முடக்குவதற்காக மோட்டரோலாவால் கூகுள் வைத்துள்ள உரிமம் உயோகிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு கோர்ட்வரை போயிருக்கிறது. கோர்ட் தீர்ப்பு, ஆப்பிளுக்கு சாதகமாக வரப்போகிறது என்று தெரிகிறது.

அப்படி நடந்தால், இந்த உரிமத்தை கூகுளால் வெளியே விற்கவும் முடியாது, உபயோகிக்கவும் முடியாது! கைகழுவி தெளித்துவிட வேண்டியதுதான்!

மோட்டரோலா மொபைலிட்டி உரிமத்தை கூகுள் 2011-ம் ஆண்டு, ‘மார்க்கெட் பெறுமதி’யைவிட அதிக விலைகொடுத்து, 12.5 பில்லியன் டாலருக்கு வாங்கியது. அதற்கு அடுத்த ஆண்டே (2012) இதன் மதிப்பு 5 பில்லியன் டாலர்தான் என்று பைல் பண்ணியது.

ஒரு வருடத்தில் 7.5 பில்லியன் டாலர் பெறுமதி குறைந்தது. இப்போது, மீதி 5 பில்லியனும் காலியாகி விடும் போலுள்ளது!



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!