Saturday, May 11, 2013

நூற்றாண்டின் மிகப்பெரிய வங்கி கொள்ளை! சில மணி நேரத்தில் 45 மில்லியன் டாலர் காலி!!


நூற்றாண்டின் மிகப்பெரிய வங்கி கொள்ளை! சில மணி நேரத்தில் 45 மில்லியன் டாலர் காலி!!



உலக அளவில் இயங்கும் குற்றவாளிகள் குழு ஒன்று சில மணி நேரத்தில் 45 மில்லியன் டாலர் பணத்தை பேங்க் ஏ.டி.எம்.களில் இருந்து எடுத்துள்ளது என அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. வங்கிகளில் கம்ப்யூட்டர் டேட்டா பேஸ்களில் ஊடுருவி, இதை அவர்கள் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

“இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வங்கிக் கொள்ளை இதுதான்” என்கிறார், அமெரிக்க அட்டர்னி ஜெனரல் லொரெட்டா லின்ச்.

பெரும்பாலும் மத்திய கிழக்கு, அரபு நாட்டு வங்கிகளின் கம்ப்யூட்டர்களையே இவர்கள் ஊடுருவியுள்ளார்கள். முன்பணம் செலுத்தப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்களின் (prepaid credit cards) பணம் எடுக்கும் லிமிட்டை (withdrawal limits) இல்லாது செய்துவிட்டு, அந்த கணக்குகளின் கோர்ட்டை இவர்களால் எடுக்க முடிந்துள்ளது.

அந்த கோர்ட்டை தம்மிடம் உள்ள ஹோட்டல் கீ-கார்ட்டுகள், அல்லது பழைய கிரெடிட் கார்ட்டுகளில் உள்ள மேக்னெடிக் ஸ்ட்ரைப்களில் ட்ரான்ஸ்போர்ம் செய்துவிட, அரபு வங்கி வாடிக்கையாளரின் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் ரெடியாகிறது. இதை வைத்து நியூயார்க் உட்பட அமெரிக்க நகரங்களில் சில மணி நேரத்தில் 45 மில்லியன் டாலர் பணத்தை எடுத்துள்ளார்கள்.

நீங்கள் அரபு வங்கி ஒன்றின் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் வைத்திருந்தால், உடனடியான உங்கள் பேலன்ஸை செக் பண்ணி பார்க்கவும்!





No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!