Friday, May 10, 2013

அக்னி சுட்டெரிக்க... வங்கக் கடலில் பிறந்தது மகாசேன் புயல்: தமிழகத்தில் மழை பெய்யும்!

அக்னி சுட்டெரிக்க... வங்கக் கடலில் பிறந்தது மகாசேன் புயல்: தமிழகத்தில் மழை பெய்யும்!



அக்னிநட்சத்திர வெயிலில் சிக்கி மக்கள் கருகிக் கொண்டுள்ள நிலையில் சின்னதாக ஒரு சந்தோஷச் செய்தி வந்துள்ளது. அதாவது தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் நல்ல கன மழை பெய்யும் வாய்ப்பு வந்துள்ளது.



தமிழகமெங்கும் அக்னி நட்சத்திரம் கொளுத்தி வருகிறது. மக்கள் வெளியில் தலை காட்டவே பயப்படும் அளவுக்கு வெயில் மோசமாக உள்ளது. இந்த நிலையில் வங்கக் கடலின் தென்கிழக்கில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது விரைவில் புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு மகாசேன் என்று பெயர் சூட்டப்படும்.


சென்னைக்கு 1200 கிலோமீட்டர் தொலைவில் இது மையம் கொண்டுள்ளது. இது வலுவடைந்து புயலாக மாறினால், ஒடிஷாவில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் தமிழகத்தைத்தாக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.


இருப்பினும் இந்தப் புயல் காரணமாக தமிழகத்தில் நல்ல கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






























No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!