Friday, May 10, 2013

மெல்ல மெல்ல சரியும் ஐடி துறை... குறையும் பணிவாய்ப்பும் ஊதிய உயர்வும்..

மெல்ல மெல்ல சரியும் ஐடி துறை... குறையும் பணிவாய்ப்பும் ஊதிய உயர்வும்..







10 ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வரூபமாக பெருநகரங்களின் புறநகரங்களை கபளீகரம் செய்து லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு லட்சக்கணங்களில் ஊதியத்தை வாரிக் கொடுத்து வரப்பிரசாதமாக இருந்தன ஐடி நிறுவனங்கள்... காலச்சக்கரம் மெல்ல மெல்ல அதன் அத்தனை மகிழ்ச்சிகளையும் புரட்டி போடத் தொடங்கியிருக்கிறது..

ஐடி நிறுவன வாழ்க்கை.. கிரெடிட் கார்டு புழக்கம்.. எல்லாவற்றுக்கும் லோன்... மாதாந்திர கட்டண முறை என்று ஒரு தினுசாகத்தான் போய்க் கொண்டிருந்த பலரது வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிர வைத்து அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.. இந்த வருஷம் இன்கிரிமென்ட் இவ்ளோ குறைந்து போச்சா... அப்படின்னா எதை எதையெல்லாம் கட் பண்ணனும்.. எப்படியெல்லாம் செலவைக் குறைக்கனும் என்ற சிந்தனை ஐடி வாழ்க்கையில் தலையெடுக்கப் போய் "ஐடி வாழ்க்கை" யை சார்ந்த தொழில்களிலும் இது ஒரு மந்த நிலையை தாக்கிக் கொண்டு வருகிறது...

கடந்த சில ஆண்டுகளாக ஐடி துறையின் வருவாய், பணியாளர்கள் சேர்ப்பு, ஊதிய உயர்வு ஆகியவற்றை முன்வைத்து ஒரு ஒப்பீட்டைப் பார்த்தாலே ஐடி துறையின் நிலைமை எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்....

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!