Friday, May 10, 2013

Deeee...அங்கிட்டு வேணாம்.. இங்கிட்டு போய்ப் பார்ப்போம்..!

Deeee...அங்கிட்டு வேணாம்.. இங்கிட்டு போய்ப் பார்ப்போம்..!

பெண்களைப் பார்த்து சைட் அடிப்பவர்கள் நிறையப் பேர். அதேபோல ஆண்களை சைட் அடிக்கும் பெண்களும் எக்கச்சக்கம். சரி.. நமக்குப் பிடித்த, 'ஹங்க்' பார்ட்டிகளை எங்கு பார்க்கலாம்.. இதற்காக சில டிப்ஸ்களைச் சொல்லவே மெனக்கெட்டுஇந்த 'ஆர்ட்டிகிள்'...!

ஆரிக்கிள் அண்ட் வென்டிரிக்கிள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஏரியா நமது உடலில் இருக்கிறது .. தெரியுமா...அதுதாங்க இதயம்- அந்த இதயத்துக்குள் புகுந்து புறப்பட்டு உள்ளத்தை புளகாங்கிதமடைய வைக்கும் ஆண்கள்தான் பெண்களைப் பெரும்பாலும் கவருகிறார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட ஆண்களை கண்டுபிடிப்பதுதான் சிரமம். அப்பபடியாப்பட்ட ஆண்களைக் கண்டுபிடிக்க நாம் சில யோசனைகளை கொடுப்போமே.... சரி டிப்ஸ் பார்ப்போமா...கல்யாண 'ராமன்'கள்...! 

கல்யாண வீட்டுக்கு நிறைய இளைஞர், இளைஞியர் சூப்பராக டிரஸ் செய்து கொண்டு படையெடுத்து வருவார்கள்- அழைத்தாலும் அழைக்காவிட்டாலும். ஏன் தெரியுமா.. ஜாடை மாடையாக நமக்கு ஏத்த சோடி அங்கிருக்கிறதா என்பதை அறியத்தான். ஆனால் இது பழைய பேஷனாகி விட்டது. நிறையப் புது டிரெண்டுகளைக் கொண்டு வந்து விட்டனர்.


அண்ணாச்சி கடைக்குப் போங்க... 

அண்ணாச்சி கடை என்றதும் அஸ்தினாபுரம் பஸ் ஸ்டாண்ட் பக்கம் வைத்திருக்கும் மளிகைக் கடை என்று நினைத்து விட வேண்டும். அதே ஏரியாவிலேயே பிரமாண்டமாக இருக்கும் நீல்கிரீஸ் போன்ற கடைகளுக்குப் போலாம். இப்போதெல்லாம் இளைஞர்கள் நிறையப் பேர் கடைகளுக்கு பர்ச்சேஸ் செய்ய வருகின்றனர்.


லைட்டாக சைட் அடித்தபடி... 

அங்கிருக்கும் கூடையை கையில் எடுத்துக் கொண்டு ஒரே ஒரு ஹமாம் சோப்பை உள்ளே போட்டுக் கொண்டு, கஷ்டப்பட்டு சாமான் வாங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களை லைட்டாக சைட் அடித்தபடி நோட்டம் விடலாம்.


இந்த சென்ட் நல்லாருக்குமே... 

மனசுக்குப் பிடித்த யாராச்சும் இருந்தால் நீங்களாகவே அவரிடம் வலியக்கப் போய் வாய் கொடுக்கலாம். இந்த சென்ட் நல்லாருக்கும் சார், யூஸ் பண்ணுங்க, எங்க பிரதமருக்குக் கூட போன வருஷம் இதையேதான் வாங்கினோம்...(அத யூஸ் பண்ணி ஏதாவது ஆயிருந்தா சொல்லிராதீக), நல்லாருக்குன்னான்..அப்படின்னு பேச்சு கொடுத்து பிரண்டாக முயற்சிக்கலாம். இது சில நேரம் செட்டாகலாம். சில நேரம் செட்டாகாமலும் போகலாம்.. நோ இஷ்யூஸ், அடுத்த கடைக்குப் போய்ட வேண்டியதுதான்.


இசை கேட்டால் அசைந்தாடும்... 

இசை நிகழ்ச்சிகளுக்குப் போகலாம். அங்கெல்லாம் இப்போது இளைஞர்கள் கூட்டம்தான். ஆனால் கர்நாடக இசைக் கச்சேரிகளுக்குப் போய் விடாதீர்கள் .. வெங்கிட்டு தாத்தாவும், சுப்புடு தாத்தாவும் வெற்றிலைக் குதப்பலுடன் உங்களை ஷாக் ஆக்கலாம்.


எனக்கும் அதேதான் பிடிக்கும் 

உங்களுக்குப் பிடித்த நபர் அங்கு இருந்தால், அந்த இசையை அல்லது அந்த இசைக்கலைஞரை காரணமாக வைத்து பேச்சுக்கொடுத்து பிரண்ட் பிடிக்கலாம். இருவரது டேஸ்ட்டும் ஒன்றாக இருந்தால் சீக்கிரமே மொபைல் எண்ணை வாங்கிட அது உதவும். மறக்காம பேஸ்புக்கிலும் ஆட் பண்ணிடுங்க.. டெய்லி ஒரு மெயிலாவது அனுப்பிருங்க.


ஜிம்முக்குப் போனா கும்முன்னு... 

ஜிம்முக்குப் போகலாம். அங்கும் நிறைய இளைஞர்கள் வெள்ளம்தான். ஜிம்மில்தான் பலரது காதல் கதைகள் பிறக்கின்றனவாம்... முறுக்கேறிய உடல் கட்டுடன் முழுசு முழுசாக நிறைய ஆண்களை அங்குதான் பார்க்கலாம். அதில் யாரையாவது பிடித்திருந்தால் சிக்னல் கொடுத்துப் பார்க்கலாம்.


விழியில் விழி மோதி 

இதயக் கதவொன்று திறந்ததே .. காதலுக்கு மரியாதை படம் பார்த்தீங்கதானே.. அங்கு விஜய்யும், ஷாலினியும் ஒரே புக்கை ரெண்டு பேரும் சேர்ந்து இழுப்பாங்களே... அதேதான். அதேபோல நீங்களும் ஏதாவது புக் ஸ்டோருக்குப் போய், உங்களுக்குப் பிடித்த நபர் இருந்தால் அவரை நைசாக பாலோ செய்து, அவர் புத்தகம் எடுத்தால் எதேச்சையாக இழுப்பது போல இழுத்து அவரையும் உங்கள் பக்கம் இழுங்கள். பார்த்து.. வேகமாக இழுத்து புக்கு கிழிஞ்சு போச்சுன்னா பெனால்டி கட்டிட்டு பே பேன்னு முழிக்க நேரிடும்.. பீ கேர்புல்.


பார்க்கிலும் கூட பார்க்கலாமே 

பார்க்கிலும் கூட நிறையப் பேரை பார்க்கலாம். இது பழைய டிரெண்டுதான் என்றாலும் கூட இன்றும் கூட நிறைய இளைஞர்களை, இளைஞிகளை இங்கு பார்க்க முடியும். பிடித்திருந்தால் பேசலாம்.. அப்படியே அங்கிருந்து பிக்கப் ஆகி பீச்சுக்குப் போய்டலாம்.... சின்னச் சின்ன டிப்ஸ்தான்.. டிரை பண்ணிப் பாருங்க.. இல்லை, இதை விட பெட்டர் டிபஸ் உங்க கிட்ட இருந்துச்சுன்னா எல்லாத்துக்கும் சொல்லுங்க.