Monday, April 8, 2013

கோடைகாலத்தில் நடைப்பயணமா? அப்ப இந்த ஆடைகளை உடுத்துங்க..

கோடைகாலத்தில் நடைப்பயணமா? அப்ப இந்த ஆடைகளை உடுத்துங்க..



விடுமுறையை கோடைகாலத்தில் கழிக்க நினைத்தால், அப்பொழுது எவ்வகையான உடைகளை அணிய வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் ஒரு நீண்ட தூர நடைபயணத்திற்கு செல்ல நினைத்தால், போதுமான அளவிற்கு நிலைமைகளை சமாளிக்க தேவையானவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு பொழுதுபோக்கு நடைப்பயணத்திற்கு செல்ல விரும்பும் போது, சரியான உடைகளை அணியாவிட்டால் அது ஒரு கெட்ட கனவாக மாறிவிட வாய்ப்புள்ளது.

அதிலும் வெயில் காலத்தில், நடைப்பயணம் என்பது ஒரு சங்கடமான விஷயம். ஏனெனில், உடலுக்கு நீர் வறட்சி ஏற்படும். இதனால் உடல் களைப்படையும். வெயில் காலத்தில் ஒரு வரம்பிற்கு உட்படுத்தப்பட்ட துணிகள் நடைப்பயணத்தை எளிதாக்கி விடும். மிக அதிக வெயிலில் செல்லும் போது, துணிகளை உடலிலிருந்து கழற்றக்கூடாது. ஏனெனில் வெயில் கடுமையான பாதிப்புகளைத் தரும். இப்போது கடுமையான வெயில் காலத்தில் செய்யும் நடைப்பயணத்திற்கு எவ்வகையான உடைகளை அணியலாம் என்று பார்ப்போம்.

1. வெயில் காலத்தில் அணியப்படும் ஆடைகளில், முதலில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது, அவை இயற்கை பொருட்களால் ஆனவையாக இருக்க வேண்டும். ஆடைகள் உடலில் ஒட்டிக்கொள்ளாதபடியும், நடைப்பயணத்திற்கு வசிதியாகவும் இருக்க வேண்டும். இதனால் தோலின் சுவாசம் தடைபடாமல் இருக்க வேண்டும்.

2. பருத்தி, ரேயான், பட்டு மற்றும் கைத்தறி ஆடைகளை பயன்படுத்தலாம். பாலிஸ்டர் துணி அணிவது வெயில் காலத்தில் முற்றிலும் பொருத்தமற்றதாக இருக்கும். பருத்தி துணி வகையே எல்லாவற்றிலும் சிறந்ததாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம், அவற்றை எளிதில் துவைக்கவும், உலரவும் வைக்கலாம்.

3. கோடைகாலத்தில் நடைப்பயணத்துக்கு லேசான வண்ணங்களை கொண்ட ஆடைகளையே அணிய வேண்டும். மேலும் அவை வியர்வையை உறிஞ்சும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். நடைப்பயணம் செய்யும் போது குளம் போல தோன்றும் வியர்வையை ஆடை உறிஞ்சாமல் இருந்தால், மிகவும் கஷ்டமாக இருப்பது மட்டுமல்லாமல் உடலுக்கு கேடு விளைவிக்கும். எடை குறைந்த ஆடைகள் சூரிய ஒளியிலிருந்து உடலை பாதுகாக்கும்.

4. நடைப்பயணதிற்கு அணியும் துணிகளின் நிறத்தை பற்றி பேசினால், லேசான நிறங்களையுடைய ஆடைகளையே அணிய வேண்டும். ஏனெனில் அவை சூரிய ஒளியை உறிஞ்சுவதற்கு பதிலாக, ஒளியை பிரதிபலிக்கும். இதனால் உடல் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும். பழுப்பு மற்றும் வெள்ளை நிற உடைகள் இவ்வகையில் பொருந்தும்.

5. தளர்ச்சியான உடைகளையே அணிய வேண்டும். ஒன்றன் மீது ஒன்றாக உள்ள அடுக்குகளாக உடைகளை அணியலாம். அதிக வெயிலில் தேவைப்பட்டால் அடுக்குகளை எடுத்துவிடலாம். இல்லையேல் மீண்டும் போட்டுக் கொள்ளாலாம்.

6. நடைப்பயணத்துக்கு உகந்த காலணிகளையும், சாக்ஸ்களையும் அணிய வேண்டும். குறிப்பாக நைலான் சாக்ஸ்களையே பயன்படுத்த வேண்டும்.

7. சூரிய ஒளியின் கடுமையை குறைக்க பருத்தியால் செய்த தொப்பியை அணியலாம். ஏனெனில் நடைப்பயணத்தின் போது சூரியனின் கடுமையான வெப்பம் எளிதில் தலையையே தாக்கும். அதனால் எச்சரிக்கையுடன் செயல்படவும்.







No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!