Wednesday, September 18, 2013

வாயுடன் வாய் முத்தம் ஆகாது... வியன்னாவில் புது உத்தரவு

வாயுடன் வாய் முத்தம் ஆகாது... வியன்னாவில் புது உத்தரவு




ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் புதிய உத்தரவு அமலாகியுள்ளது. அதாவது பஸ், ரயில்களில் வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது, செல்போனில் சத்தமாக பேசுவது, சீன உணவுகளை சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. கலை கலாச்சாரத்திற்குப் பெயர் போன வியன்னாவின் பெருமையை காக்கும் வகையில் இந்த உத்தரவை அந்த நாட்டு போக்குவரத்துத்துறை அமல்படுத்தியுள்ளதாம். பொது இடங்களில், பொதுப் போக்குவரத்துகளில் இனிமேல் இப்படி நடந்தால் அது அநாகரீகமாக கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படுமாம்.

நாகரீகம்.. ப்ளீஸ் 

ரயில்கள், பேருந்துகளில் ஜோடிகளாகப் போவோர் மிகவும் நாகரீகமாக நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முத்தம் கூடவே கூடாது 

தம்பதிகள் நெருக்கமாக அமருவது, வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

முத்தச் சத்தம் தாங்க முடியலை.. 

வியன்னாவில் பொதுப் போக்குவரத்தை வியனர் லினியன் என்ற நிறுவனம்தான் கவனிக்கிறது. இந்த நிறுவனத்திற்கு நிறையப் புகார்கள் வந்ததாம். அதில், பொது போக்குவரத்து வாகனங்களில் பப்ளிக்காக முத்தம் கொடுப்போரால் பெரும் சங்கடம் ஏற்படுவதாக மக்கள் குமுறியிருந்தனராம்.

ஹலோ..நான் பேசுறது கேட்குதா.. 

அதேபோல செல்போன்களில் படு சத்தமாக பேசுவதையும் தடை செய்துள்ளனர். இது அக்கம் பக்கத்தில் இருப்போருக்கு இடையூறாக இருப்பதால் இந்த தடை. இனிமேல் மெதுவாகத்தான் செல்போனில் பேச வேண்டுமாம்.

சீனச் சாப்பாடு, கபாபுக்கும் தடை 

அதேபோல சீனச் சாப்பாடு, பாஸ்ட் புட், கபாப் போன்றவற்றை ரயில்கள், பஸ்களில் வைத்து மொச்சக் மொச்சக் என்று சாப்பிடுவதற்கும் தடை போட்டு விட்டனர்.

ஆள் வைத்துப் பிடிப்பார்கள் 

இந்த உத்தரவுகளை கண்காணிக்கவும், தவறு செய்வோரைக் கையும் களவுமாக பிடிப்பதற்கும் ஆட்களை நியமித்துள்ளனராம்.

நிர்வாணத்திற்கும் தடை 

இதேபோல பலர் திடீரென டிரஸ்ஸைக் கழற்றிப் போட்டு நிர்வாணமாக காட்சி தருவதும் அங்கு சகஜமாகும். அதற்கும் தடை போட்டுள்ளனர்.

ஓடும் ரயிலில் குஜால் 

ஒருமுறை ஓடும் ரயிலிலேயே ஒரு ஜோடி உடலுறவில் ஈடுபட்டு சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமும் அங்கு நடந்துள்ளதாம்.

குதிரையுடன் வந்த ஜாக்கி 

இன்னொரு முறை ஒரு நபர் தான் வளர்த்து வரும் குதிரையுடன் ரயிலில் பயணித்து அத்தனை பேரையும் டென்ஷனாக்கினாராம்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!