Friday, September 20, 2013

15வது மனைவியை மணமுடிக்க தயாராகும் சுவாசிலாந்து மன்னர்

15வது மனைவியை மணமுடிக்க தயாராகும் சுவாசிலாந்து மன்னர்



ஆப்ரிக்காவிலுள்ள சுவாசிலாந்து நாட்டின் மன்னர், 15வது மனைவியை தேர்வு செய்து உள்ளார். சுவாசிலாந்தின் மன்னராக 45 வயதான எம்ஸ்வாட்டி ஆட்சி செய்கிறார்.
இவர் மன்னராக பொறுப்பேற்ற பின், தங்கள் பாரம்பரியப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்து வருகிறார்.

மன்னர், புதிய மனைவியை தேர்வு செய்வதற்காக இங்கு "நாணல் புல்' திருவிழா நடக்கிறது.

இத்திருவிழாவில், நூற்றுக்கணக்கான கன்னி பெண்கள் மேலாடை அணியாமல், நாணல் புல்களை ஏந்தி, மன்னர் முன் ஆடிப் பாடி, அணிவகுத்து செல்வார்கள். இந்த பெண்களில் ஒருவரை மன்னர் தேர்வு செய்து அந்த பெண்ணின் தலையில், சிகப்பு இறகை செருகி, மனைவியாக்கி கொள்வார்.

சுவாசிலாந்து மன்னரின் இந்த செயலுக்கு, இங்குள்ள எதிர்கட்சியினரும், சில நாடுகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

"ஏற்கனவே, சுவாசிலாந்தில், எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம். இதில், மன்னரின் இந்த நடவடிக்கை எய்ட்சை அதிகரிக்க வழி செய்யும் விதத்தில் உள்ளதென எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால், இதையெல்லாம், மன்னர் கண்டுகொள்வதாக தெரியவில்லை.

இந்த ஆண்டும், வழக்கம் போல், கன்னி பெண்களின் அணிவகுப்பை நடத்தி, சின்டிஸ்வா டிலாமினி, என்ற பெண்ணை, 15வது மனைவியாக தேர்வு செய்து உள்ளார். இதற்கான அரசு பூர்வமான அறிவிப்பு வரும், 28ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

மன்னருக்கு, முந்தைய மனைவிகள் மூலம் 24 குழந்தைகள் உள்ளனர். மன்னரின், செக்ஸ் கொடுமை தாங்க முடியாமல், மூன்று மனைவிகள் ஓடி விட்டனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!