Friday, September 20, 2013

உலக தரவரிசையில் ஐஐஎம் அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவிற்கு 18, 19-ஆம் இடம்!!!

உலக தரவரிசையில் ஐஐஎம் அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவிற்கு 18, 19-ஆம் இடம்!!! 


2013 எஃப்டி மாஸ்டர்ஸ் இன் மேனேஜ்மென்ட் (எம்ஐஎம்) சர்வேயில், ஐஐஎம் அகமதாபாத் மற்றும் ஐஐஎம் கொல்கத்தா ஆகியவற்றின் முதுநிலை பட்டப்படிப்புகள் உலகின் தலைசிறந்த 20 நிர்வாக பாடத்திட்டங்களுள் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. 

ஐஐஎம் அகமதாபாத் 18-வது இடத்தைப் பிடித்திருக்கும் அதே வேளையில் ஐஐஎம் கொல்கத்தா அதனைத் தொடர்ந்து 19-வது இடத்தைப் பிடித்துள்ளது. அகமதாபாத் ஐஐஎம் போலன்றி கொல்கத்தா கல்வி நிறுவனம் இந்த பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஐஐஎம்-சி இந்த சர்வேயில் பங்கேற்பது இதுவே முதல் முறை ஆகும்.

013 எஃப்டி மாஸ்டர்ஸ் இன் மேனேஜ்மென்ட் (எம்ஐஎம்) தரவரிசையில், பணி சார்ந்த முன் அனுபவம் உள்ள அல்லது அறவே முன் அனுபவம் இல்லாத மாணாக்கர்களுக்கான தலைசிறந்த 70 பாடத்திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. உலகளவில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த செயின்ட் கேல்லன் பல்கலைக்கழகம், தொடர்ந்து மூன்றாவது வருடமாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஐரோப்பாவைச் சேர்ந்த இஎஸ்சிபி மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த டபிள்யூஹெச்யூ பெய்ஷெய்ம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. 

ஐஐஎம் அகமதாபாத் மற்றும் ஐஐஎம் கொல்கத்தா ஆகிய இவ்விரு கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவின் சார்பில் இந்த தர வரிசைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இவை இரண்டும், உலகப்புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களாக அறியப்படும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், ஆல்டோ பல்கலைக்கழகம், மான்செஸ்டர் பிசினஸ் ஸ்கூல் மற்றும் இதர பல கல்வி நிறுவனங்களுக்கும் மேலானதாக பட்டியலிடப்பட்டுள்ள சிறப்பைப் பெற்றுள்ளன. 

"மேலாண்மை கல்வியின் உலகளாவிய கூட்டணி நிறுவனமான சிஇஎம்எஸ் -உடனான எங்களது தொடர்பு, எஃப்டி ரேங்கிங் சர்வேயில் நாங்கள் பங்கேற்க வழி வகுத்ததோடல்லாமல், சர்வதேசத் தரத்தை நோக்கிய எங்களின் பயணத்துக்கும் தூண்டுகோலாகத் திகழ்கிறது. நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஏஏசிஎஸ்பியின் (AACSB) அங்கீகாரத்தோடு, சர்வதேசத் தரம், தொழில் முனைவு மற்றும் வலுவான அடித்தளம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு நாங்கள் மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளும் வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில், வரும் ஆண்டுகளில் எங்களால் மேலும் சிறப்பாக செயலாற்ற முடியும் என்று நம்புகிறோம்." என்று ஐஐஎம் கொல்கத்தா சார்பில் வெளியான ஒரு பத்திரிக்கைச் செய்தி கூறுகிறது. 

இவ்வருடத்தின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட 2013ஆம் ஆண்டுக்கான எஃப்டி உலக எம்பிஏ தரவரிசைப் பட்டியலில் ஐஐஎம் அகமதாபாத் 26 ஆம் இடத்தைப் பிடித்த அதே வேளையில், ஐஎஸ்பி ஹைதராபாத் 34-வது இடத்தைப் பிடித்திருந்தது. இவ்விரு நிறுவனங்களும் கடந்த ஆண்டு தொடங்கி பல்வேறு சறுக்கல்களிலிருந்து தப்பி வந்துள்ளன.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!