Friday, September 20, 2013

அடிமையாவது, நரம்பு பிரச்சனையால் ஃபேஸ்புக், ட்விட்டரில் இருந்து வெளியேறும் மக்கள்

அடிமையாவது, நரம்பு பிரச்சனையால் ஃபேஸ்புக், ட்விட்டரில் இருந்து வெளியேறும் மக்கள் 


இன்டர்நெட்டுக்கு அடிமையாவது, தனிமை பறிபோதவது மற்றும் நரம்பு பிரச்சனையால் பலர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது நிறுத்தி வருகின்றனர் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. 

பலர் அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர் இன்டர்நெட்டே கதி என்று இருக்கின்றனர். மேலும் ஃபேஸ்புக், ட்விட்டர் இருப்பது அவர்களுக்கு மேலும் வசதியாக உள்ளது. நண்பர்களிடம் அரட்டை அடிப்பது, தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நிமிடத்திற்கு நிமிடம் சமூக வலைதளங்களில் அப்டேட்ட செய்யும் ஆட்கள் உள்ளனர். 

இந்நிலையில் வியன்னா பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் சமூக வலைதளங்கள் பயன்பாடு குறித்து ஒரு ஆய்வை நடத்தினர்.

விக்கிலீக்ஸ் 

விக்கிலீக்ஸ். தேசிய பாதுகாப்பு ஏஜென்சி ஆகியவை பல ரகசியங்களை அம்பலப்படுத்தியதையடுத்து சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் தங்களின் சொந்த விஷயங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அஞ்சுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஃபேஸ்புக் 

தங்களின் சொந்த விஷயங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நினைத்து பலர் தங்களின் ஃபேஸ்புக் கணக்கை டிலீட் செய்து வருகின்றார்களாம்.

சமூக வலைதளங்கள் 

இன்டர்நெட்டிலேயே கிடையாய் கிடப்பது, தனிமை பாதிக்கப்படுவது மற்றும் நரம்பு பிரச்சனையால் பலர் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுகிறார்களாம்.

போர் அடித்துவிட்டது 

சமூக வலைதளங்களை பயன்படுத்தி போர் அடித்துவிட்டதாலும் சிலர் அவற்றை பயன்படுத்துவதை நிறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!