Friday, September 20, 2013

நம்பர் 1 குடிகார நாடு எது தெரியுமா?

நம்பர் 1 குடிகார நாடு எது தெரியுமா? 


தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை 2011 - 2012 ம் ஆண்டு 18 ஆயிரத்து 81 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியிருப்பதாக சொல்கிறது புள்ளிவிபரம். 

பத்துரூபாய் அம்மா வாட்டர் விற்பனையால் குஷியாகியுள்ள தமிழ்நாட்டு ‘குடி' மகன்கள் இதேபோல் மலிவு விலையில் வறுத்த முந்திரி, சிப்ஸ் விற்பனை செய்தால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதன் மூலம் விற்பனையை இன்னும் சில கோடிகள் உயர்த்துவோம் என்றும் கூறியுள்ளனர். அதேபோல் சரக்கு குடிக்க டம்ளர், ஊறுகாய், இன்னும் சில பல கோரிக்கைகளையும் அரசுக்கு வைத்துள்ளனர். 

நம்முடைய கட்டுரை அதைப்பற்றியதல்ல. உலகிலேயே அதிக அளவு குடிக்கும் நாடுகளைப் பற்றியும், பீர் குடிமகன்களைப் பற்றியும்தான்.

மோல்டோவா 

இந்த நாடு உலக மேப்பில் எங்கிருக்கு என்று தேடும் முன்பாக இந்த நாட்டு மக்கள்தான் மொடா குடிகாரர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த நாட்டின் குடிமகன் ஒருவர் வருடத்திற்கு சராசரியாக 250 லிட்டர் குடிக்கிறாராம்.

செக் குடியரசு 

செக் குடியரசு நாட்டில் ஒரு நபர் ஆண்டிற்கு சராசரியாக 210 லிட்டர் சரக்கை உள்ளே தள்ளுகிறாராம்.

அயர்லாந்து 

இந்த நாட்டில் மெடிக்கல் ஷாப் இருக்கிறதோ இல்லையோ, தெருவுக்கு தெரு பப்களும், டான்ஸ் பார்களும் பரவிக் கிடக்கின்றன. குடி, கிளுகிளு டான்ஸ் என குஜாலாக வாழும் இந்த நாட்டில் ஒரு குடிமகன் ஒரு ஆண்டிற்கு 196 லிட்டரை உள்ளே தள்ளுகிறாராம்.

எஸ்டோனியா 

இங்கு மதுவிலை ரொம்ப கம்மியாம். தமிழ்நாட்டில் இருந்து குடிப்பதற்காகவே பாண்டிச்சேரி போகும் மக்கள் இருக்கின்றனர். அதேபோல இந்த நாட்டில் சுற்றுலா துறையே எங்க ஊரில் மதுவிலை ரொம்ப கம்மி என்று கூவி கூவி மக்களை அழைக்கிறதாம். இந்த நாட்டு குடிமகன் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 186 லிட்டர் மது குடிக்கிறாராம்.

ஜெர்மனி 

இந்த நாட்டில்தான் பீர் திருவிழாவே நடைபெறுகிறது. அக்டோபர் ஃபிஸ்ட் கொண்டாடும் இந்த நாட்டில் சராசரியாக குடிப்பழக்கம் உள்ள ஒரு நபர் ஆண்டுக்கு 170 லிட்டர் பீர் குடிக்கிறாராம்.

ஆஸ்த்ரியா 

ஆஸ்த்ரியா நாட்டில் 22 சதவிகிதம் பேர் ஒயின் குடிப்பவர்களாம். இங்குள்ள பெண்கள் பீர் குடிப்பதில் கில்லாடிகளாம்.

பின்லாந்து 

பின்லாந்து நாட்டு மக்கள் பீர்தான் அதிகம் குடிக்கின்றனராம். சராசரியாக ஒரு நபர் 146 லிட்டர் பீர் குடிக்கிறாராம்.

பெல்ஜியம் 

பெல்ஜியம் நாட்டில் குடிகாரர்களுக்குத்தான் மரியாதையாம், பணக்கார்ர்கள் கூடவே ஒரு அசிஸ்டெண்ட்களை வேறு வைத்திருப்பார்களாம்.

லூதியானா 

ஐரோப்பிய நாடான லூதியானாவில் மொத்த தொழில் முதலீட்டில் 78 சதவிகிதம் மது தயாரிப்பதுதானாம். சிலர் குடிப்பதற்காக சொந்த பேக்டரி கூட வைத்திருக்கிறார்களாம்.

அமெரிக்கா 

அமெரிக்க மக்கள் தொகையில் 22 சதவிகிதம் பேருக்கு பீர் குடிக்கும் பழக்கம் இருக்கிறதாம். ஆண்டுக்கு சராசரியாக ஒருவர் 129 லிட்டர் பீர் குடிக்கிறார்களாம்.

ஆஸ்திரேலியா 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குடிமகன் ஒருவர் சராசரியாக 109.9 லிட்டர் பீர் குடிப்பாராம்.

பீர் குடியர்கள் 

லக்ஸ்சம்பர்க் மக்களில் ஒருவர் சராசரியாக 84.4 லிட்டர் பீர் குடிக்கிறாராம். டென்மார்க் மக்கள் சராசரியாக 89 லிட்டர் பீரும், யுகே குடிமகன் ஒருவர் சராசரியாக ஆண்டுக்கு 99 லிட்டர் பீரும் குடிக்கிறாராம்.

இந்தியா

நல்லவேலை இந்த லிஸ்டில் இந்தியா இல்லை என்பது முக்கிய அம்சம்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!