Thursday, September 27, 2012

வானுயர்ந்த கட்டிடங்கள் எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவை சீனா மிஞ்சும்

வானுயர்ந்த கட்டிடங்கள் எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவை சீனா மிஞ்சும்





 வானுயர்ந்த கட்டிங்களின் எண்ணிக்கையில், அடுத்த 5 ஆண்டில் அமெரிக்காவை சீனா மிஞ்சிவிடும் என்று தெரியவந்துள்ளது. அமெரிக்காவில்தான் வானுயர்ந்த கட்டிடங்கள் அதிகளவில் உள்ளன. 150 மீட்டருக்கு மேற்பட்ட கட்டிடங்கள் இங்கு மிக அதிகம். ஆனால், அடுத்த 5 ஆண்டில் சீனா இந்த சாதனையை கைப்பற்றி விடும் என்று தெரியவந்துள்ளது. கட்டிடங்கள் குறித்த ஆய்வு அமைப்பான மோசியன்சிட்டி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:

தற்போது உலகிலேயே அதிக உயரங்கள் கொண்ட கட்டிடங்கள் அமெரிக்காவில்தான் உள்ளன. இங்கு  152 மீட்டருக்கு மேற்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை 533. சீனாவில் இதன் எண்ணிக்கை 470 ஆக உள்ளது. ஆனால், 2017ம் ஆண்டில் அமெரிக்காவில் வானுயர்ந்த கட்டிடங்களின் எண்ணிக்கை 539 ஆக இருக்கும். அதே ஆண்டில் சீனாவில் இந்த அளவுக்கு உயரம் கொண்ட கட்டிடங்களின் எண்ணிக்கை 802 ஆக அதிகரிக்கும். அடுத்த 10 ஆண்டுகளில், சீனாவில் இந்த எண்ணிக்கை 1,318 ஆகவும், அமெரிக்காவில் 563 ஆகவும் இருக்கும்.

தற்போது சீனாவில் 332 வானுயர்ந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், 516 கட்டிடங்கள் கட்டுமானப் பணிக்காக காத்திருக்கின்றன. ஆனால், அமெரிக்காவில் 6 கட்டிடங்கள் மட்டுமே கட்டுமானத்தில் உள்ளன. மேலும், 24 கட்டிடங்கள் வரைபட அளவில் உள்ளன. இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், சீனாவின் பெரிய நகரங்களான ஷாங்காய், தலைநகர் பீஜிங் மட்டுமில்லாமல், 2ம் நிலை நகரங்களிலும் வானுயர்ந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்பதுதான். இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!