Tuesday, September 25, 2012

பேஸ்புக் அலறல்! எதுவும் தெரியலிங்க!!

பேஸ்புக் அலறல்! எதுவும் தெரியலிங்க!!


“பேஸ்புக்கில் தனிப்பட்ட முறையில் இருவருக்கு இடையே நடைபெறும் பிரைவேட் பேச்சுக்கள், பகிரங்கமாக தெரிகின்றன” என்ற குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது பேஸ்புக். நேற்று (திங்கட்கிழமை) பிரான்ஸில் இந்த வதந்தி பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தனிப்பட்ட இருவருக்கு இடையிலான பிரைவேட் பேச்சுக்கள், குறிப்பிட்ட நபர்களின் பேஸ்புக் பக்கங்களை கிளிக் செய்யும் அனைவருக்கும் தெரிகின்றன என்பதே வதந்தி. அதையடுத்து நேற்று மதியத்தில் இருந்து பிரான்ஸில் பேஸ்புக் பாவனையாளர்கள் கொந்தளித்துக் கொண்டு இருந்தனர். மீடியா கவரேஜூம் கடுமையாக இருந்தது.

அமெரிக்கா கலிபோர்னியா நேரம் நேற்று நள்ளிரவு (பிரான்சில் இன்று அதிகாலை) பேஸ்புக் வெளியிட்ட பிரெஞ்ச் செய்திக் குறிப்பில், “அப்படி ஏதும் தனிப்பட்ட பேச்சுக்கள் தெரியவில்லை” என்று மறுத்துள்ளது. இருப்பினும், இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது!

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!