Wednesday, September 26, 2012

திராட்சை தோட்டத்துக்கு ரோபோ தொழிலாளி : பிரான்சில் தயாரிப்பு

திராட்சை தோட்டத்துக்கு ரோபோ தொழிலாளி : பிரான்சில் தயாரிப்பு இங்கயும் வந்திட்டாங்க ஐயா

 


பிரான்சில் உள்ள திராட்சை தோட்டங்களில் சம்பளம் கேட்காமல், லீவு எடுக்காமல், கால நேரம் பார்க்காமல் வேலை செய்ய ஒரு தொழிலாளி தயாராக உள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட வால்,யே என்ற ரோபோதான் அவர். பிரான்சின் பர்கண்டி பகுதியைச் சேர்ந்த கிரிஸ்டோபி மில்லட் என்பவர் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளார். இந்த ரோபோ 50 செ.மீ. உயரம், 60 செ.மீ. நீளம், 20 கிலோ எடை கொண்டது. இதில் 2 கைகள் போன்ற அமைப்பு, 6 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. திராட்சை தோட்டங்களில் தொழிலாளர்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் இது செய்யும். திராட்சைத் தோட்டத்தில் கொடிகளுக்கு இடையே வளர்ந் திருக்கும் களைகளை அகற்றுதல், மண்ணை கிளறி விடுதல், திராட்சை கொடியின் ஆரோக்கியம், மண்ணின் தன்மை குறித்து ஆராய்தல், அவை குறித்த தகவல்களை சேகரித்தல் ஆகிய பணிகளையும் இது செய்யும். ஒரு நாளுக்கு 600 திராட்சைக் கொடிகளில் தேவையில்லாத கிளைகளை வெட்டி அகற்றும் திறன் கொண்டது. இதுகுறித்து கிரிஸ்டோப் மில்லட் கூறுகையில், Ôதிராட்சைத் தோட்டத்தில் பணியாற்ற பணியாளர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால்தான் இந்த வகை ரோபோ உருவாக்கப்பட்டது. இதில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதால் இந்த வகை ரோ போ எங்கு பணி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதோ அங்கு மட்டுமே பணிபுரியும். பல விவசாயி கள் இதை வாங்க முன்வந்துள்ளனர்Õ’ என்றார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!