Thursday, June 13, 2013

11 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள விண்மீன் கூட்டத்திற்குள் ஒரு கரும் பள்ளம்!

11 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள விண்மீன் கூட்டத்திற்குள் ஒரு கரும் பள்ளம்!



அண்டத்தில் 11 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள சிற்ப விண்மீன் கூட்டத்திற்குள் ஒரு கரும் பள்ளம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கரும்பள்ளம் அண்டவெளியில் சுற்றிவரும் குப்பைகளை விழுங்கி அமைதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இங்கிருந்து மிக அதிவேகத்தில் நட்சத்திரங்கள் பிறந்து கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பால் வீதியில் கரும்பள்ளத்தின் செயல்பாடுகளும், நட்சத்திர உற்பத்தியும் எவ்வாறு இணைந்து செயல்படுகிறது என்பது வானியல் ஆராய்ச்சியாளர்களை பெரிதும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

சிற்ப விண்மீன் திரளுக்குள் இருக்கும் இந்த கருங்குழியின் அளவானது நமது சூரியனை விட 5 மில்லியன் மடங்கு பெரிது என்று கூறப்படுகிறது. சந்திரா மற்றும் நஸ்டர் விண்கல ஆய்வகத்தில் பாதிவாகியுள்ள இந்த கருங்குழி மீண்டும் இன்னும் சில வருடங்களில் காணப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!