Tuesday, June 11, 2013

ஒரு ‘கூடை’யிலே எங்கள் குடியிருப்பு...

ஒரு ‘கூடை’யிலே எங்கள் குடியிருப்பு...



குகைகளில் வாழ்ந்த மனிதன், இன்று கட்டிட கலையில் புகுந்து விளையாடுகிறான். கட்டிடங்களை விதவிதமாக உருவாக்கி மகிழும் ரசனை இன்று உலகம் முழுதும் பரவிக் கிடக்கிறது. அப்படித்தான், அமெரிக்காவில் உள்ள ‘லாங்கபெர்கர் கூடை' தயாரிப்பு நிறுவனம் தங்களது தலைமையகக் கட்டிடத்தை கூடை பொன்ற அமைப்பில் உருவாக்கி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

என்ன வடிவத்தில் தங்களது தலைமையகக் கட்டிடத்தைக் கட்டலாம் என யோசித்த போது, அது தங்களது தயாரிப்பை பிரதிபலிப்பதாக இருந்தால், நன்றாக இருக்கும் என நிர்வாகம் யோசித்ததாம். அதன் விளைவாக உருவானது தான் இந்தக் ‘கூடைக் கட்டிடம்'. ஓஹையோ மாநிலத்தில் அமைந்துள்ள இந்தக் கூடைக்கட்டிடத்தில் மொத்தம் ஏழு மாடிகள் உள்ளன. ஒரு லட்சத்து 80 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், மொத்தம் 3 கோடி டாலர் செலவில் இதை உருவாக்கியுள்ளனர். இந்த கூடைக் கட்டிடத்தை கட்டி முடிக்க ஏறத்தாழ இரண்டாண்டுகள் ஆனதாம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!