Wednesday, June 12, 2013

392 அடி உயர வல்லபாய் படேல் சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்க மோடி திட்டம்

392 அடி உயர வல்லபாய் படேல் சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்க மோடி திட்டம்



வல்லபாய் படேல் சிலை அமைப்பதற்காக நாடு முழுவதும் விவசாயிகளிடம் இருந்து இரும்பு சேகரிக்கும் திட்டத்தை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தொடங்குகிறார்.இரும்பு மனிதர் என்று போற்றப்படும் வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் 392 அடி உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிய சிலை அமைக்கப்படும் என்று மோடி ஏற்கனவே அறிவித்தார். சர்தார் சரோவர் அணைக்கு எதிரே நிறுவப்பட உள்ள இந்த சிலைக்காக, நாடு முழுவதும் 5 லட்சம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து சிறிய அளவிலான இரும்பு துண்டுகள் சேகரிக்கப்படும் என்று காந்திநகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் நரேந்திர மோடி அறிவித்தார்.படேல் பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதி முதல் இதற்கான தேசிய அளவிலான பிரசாரம் தொடங்கும் என்றும் மோடி கூறினார். பா.ஜ.வின் பிரசார குழு தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு தழுவிய பிரசார திட்டத்தை மோடி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!