Wednesday, June 12, 2013

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சிறுத்தை சாவு

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சிறுத்தை சாவு


கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த, திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா வன விலங்கு பூங்காவில் இருந்த சிறுத்தை பாலாஜி உடல் நலக்குறைவால் நேற்று இறந்தது. திருமலை அடிவாரம் சேஷாசலம் வனப்பகுதியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா வன விலங்கு பூங்கா உள்ளது. இங்கு 1998ம் ஆண்டு 12 வயதுடையை ஒரு ஆண் சிறுத்தை, மான்களை வேட்டையாடிய போது வனத்துறையினரிடம் பிடிபட்டது.


அப்போது, அதன் எடை 113 கிலோவாக இருந்தது.இதையடுத்து, வனத்துறையினர் பிடிப்பட்ட சிறுத்தையை பாலாஜி என பெயர் வைத்து வன விலங்கு பூங்காவில் வைத்து பாரமரித்து வந்தனர். சாதாரணமாக சிறுத்தைகள் 12 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழும். 55 முதல் 65 கிலோ எடை மட்டுமே இருக்கும். தற்போது, 27 வயதான சிறுத்தை பாலாஜி கடந்த 2 தினங்களாக வயது முதிர்ச்சி காரணமாக மிகவும் சோர்வுடன் காணப்பட்டது. மேலும், உணவு சாப்பிட முடியாமல் இருந்த பாலாஜி நேற்று அதிகாலை திடீரென இறந்தது. இறந்த சிறுத்தை பாலாஜி, உலகின் நீண்ட காலம் உயிர் வாழ்ந்த சிறுத்தை என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!