Friday, November 29, 2013

முதன்முறையாக எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை

முதன்முறையாக எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை



பிரான்சில் முதன்முறையாக எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புகைப்பிடிப்பதால் உடல் நலத்திற்கு கேடு என்று எவ்வளவோ கூறியும் மக்கள் கேட்டபாடில்லை.

இதனை புகைப்பவர்களை விட அருகில் இருப்பவர்களுக்குத் தான் பாதிப்பு அதிகம்.

இந்நிலையில் சிகரெட்டுக்கு பதிலாக, எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதற்கும் எதிர்ப்புகள் எழுந்ததால், வடக்கு பிரான்சில் உள்ள Saint-Lo என்ற நகரத்தில் முதன் முறையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஹொட்டல், பூங்காக்கள் உட்பட பொது இடங்களில் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 18 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கு விற்கக்கூடாது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை உபயோகிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புகையிலை பழக்கத்திலிருந்து விடுபட்டு, மருத்துவர்களின் ஆலோசனைப்படியே இதனை உபயோகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இந்த தடையை நாடு முழுவதும் அமுல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!