Friday, November 29, 2013

இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு சூரியனை நோக்கி பாயும் ஐசான்.. காணத் தவறாதீர்கள்...!

இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு சூரியனை நோக்கி பாயும் ஐசான்.. காணத் தவறாதீர்கள்...!



உலகெங்கும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் விரித்த கண்களுடன் வானை நோக்கி காத்திருக்கின்றனர். இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு ஐசான் வால்நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகில் போகிறது.

உலகத்தில் உள்ள அத்தனை தொலைநோக்கிகளும், விண்ணியல் ஆர்வலர்களின் கண்களும் ஐசான் வால்நட்சத்திரத்தை நோக்கி திரும்பியுள்ளன. ஐசான் என்னாகப் போகிறது, சூரியனுக்கு அருகே அது போகும்போது என்ன நடக்கும் என்ற பேரார்வம் அத்தனை பேர் மனதிலும் அப்பிக் கிடக்கிறது.

படு வேகமாக சூரியனை நோக்கி போய்க் கொண்டிருக்கும் ஐசான் இன்று நள்ளிரவு சூரியனை மிக மிக அருகே நெருங்கப் போகிறது. அது தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லை, பொசுங்கிப் போய் விடும் என்று பொதுவான கருத்து இருந்தாலும் தப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் சிலர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்

நேரடியாக ஒளிபரப்பு

ஐசான் வால்நட்சத்திரம் சூரியனுக்கு மிக மிக அருகே இன்று போகும் காட்சியை நேரடியாக தொலைநோக்கிகள் மூலம் காண பல்வேறு நாடுகளில் உள்ள விண்வெளி அமைப்புகள், கோளரங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன..

அமெரிக்காவின் நன்றி கூறும் தினத்தில்...

அமெரிக்காவில் நன்றி கூறும் தினம் தொடங்கும் நாளில் ஐசான் வால் நட்சத்திர் சூரியனைத் தொடவுள்ளது. அதாவது இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.15 மணியளவில்.

டைரக்டாக பார்க்காதீர்கள்

ஐசான் வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கும் காட்சியை பகலில் பார்ப்பது நல்லதல்ல. அதாவது நேரடியாக பார்ப்பது நல்லதல்ல. அதிலும் சூரியனை நேராக பார்த்தால் கண் பார்வை பறிபோகும் வாய்ப்புள்ளதாம்.


சோஹோ விண்கலம் தரும் நேரடி ஒளிபரப்பு

விணணில் நிலை கொண்டுள்ள சோஹோ என்று அழைக்கப்படும் சோலார் அன்ட் ஹீலியோஸ்பெரிக் அப்சர்வேட்டரி என்ற விண்வெளி தொலைநோக்கி மூலமும், ஐசான் சூரியனை நெருங்கும் காட்சியை நேரடியாக காட்ட நாசா ஏற்பாடு செய்துள்ளது.

வீடியோ காட்சிகளைக் காணலாம்

சோஹோ மூலம் கிடைக்கும் வீடியோ காட்சிகளை நாம் காணவும் நாசா ஏற்பாடு செய்துள்ளது. http://sohowww.nascom.nasa.gov/home.html இங்கே போனால் அதைப் பார்க்கலாம்.


சூரியனை நோக்கி பல கேமராக்கள்

சோஹாவில் பல்வேறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்தனையும் சூரியனை ஆய்வு செய்வதற்காக பொருத்தப்பட்டவையாகும். இந்த சோஹா, 1995ம் ஆண்டு ஏவப்பட்டதாகும். இன்னும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!