Friday, November 29, 2013

ஐபோன் 4எஸ்-ல் சார்ஜ் செய்தபடி பேசிக் கொண்டிருந்த வாலிபர் ஷாக் அடித்து பலி!

ஐபோன் 4எஸ்-ல் சார்ஜ் செய்தபடி பேசிக் கொண்டிருந்த வாலிபர் ஷாக் அடித்து பலி!


தாய்லாந்தில் ஐபோன் 4எஸ்ஸை சார்ஜில் போட்விட்டு அதில் பேசிக் கொண்டிருந்த நபர் மின்சாரம் தாக்கி பலியானார்.

தாய்லாந்தின் சந்தாபுர் மாகாணத்தைச் சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் ஆப்பிள் ஐபோன் 4எஸ்-ஐ பயன்படுத்தி வந்தார். அவர் தனது போனை சார்ஜ் போட்டுக் கொண்டே பயன்படுத்தினார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் பலியானார். அவர் பயன்படுத்தியது ஒரிஜினல் ஆப்பிள் சார்ஜர் இல்லையாம்.

அந்த நபர் செல்போனை சார்ஜில் போட்டுக் கொண்டே அதில் பேசிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் சீனாவில் ஒரு பெண் ஆப்பிள் ஐபோன் 5-ஐ சார்ஜில் போட்டுக் கொண்டே பேசியபோது மின்சாரம் தாக்கி பலியானார். இதையடுத்து அந்த பெண்ணின் மரணம் குறித்து ஆப்பிள் நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டது.

அதற்கும் முன்பு தாய்லாந்தில் ஆப்பிள் ஐபோன் 5- போனை பயன்படுத்தியபோது அது வெடித்துச் சிதறியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!