Wednesday, June 26, 2013

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம்!: ஒரு ஷாக் ரிப்போர்ட்

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம்!: ஒரு ஷாக் ரிப்போர்ட்



இந்திய அரசு, வேலைவாய்ப்பு தொடர்பில்லாத வளர்ச்சிக் கொள்கையை கடைபிடித்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு வருடங்களில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 10% உயர்ந்துள்ளது. மந்தமான பொருளாதார நிலை, போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது மற்றும் நிறுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் போன்றவையால் வேலை வாய்ப்புக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

என்எஸ்எஸ்ஒ(NSSO) 

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள தேசிய மாதிரி சர்வே நிறுவனம்(NSSO), ஜனவரி 1, 2012 இன் படி, 10.8 மில்லியன் நபர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். கடந்த ஜனவரி 1, 2010 இன் படி வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 9.8 மில்லியனாக இருந்தது. இந்த இரண்டு ஆண்டுகளில் இது 10% அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.

ஜிடிபி 

நிதி ஆண்டு 2012 இல், நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி 6.2%, நிதி ஆண்டு 2013 இல் 5% இருக்கிறது. இந்தப் பொருளாதார மந்த நிலை காரணமாக, வேலை வாய்ப்புக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

புள்ளிவிவரம் 

சர்வே நடத்தியவர்கள், ஒரு நபரின் பிரதான வேலை மற்றும் இதர வருமான வழிகளையும் சேர்த்து இந்த புள்ளி விவரத்தை அளித்துள்ளனர். ஆனால், ஒரு நபரின் பிரதான வேலையை மட்டும் கணக்கிட்டிருந்தால், வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று கருதுகின்றனர் நிபுணர்கள்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!