Wednesday, June 26, 2013

இதோ புதிய சூரியன்.. 3 புதிய பூமிகள்!

இதோ புதிய சூரியன்.. 3 புதிய பூமிகள்!


அண்டவெளியில் தேள் விண்மீன் தொகுப்பில் (constellation of Scorpius) ஒரு நட்சத்திரத்தை மூன்று கிரகங்கள் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்று கிரகங்களிலும் நமது பூமியைப் போலவே உயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழல் நிலவலாம் என்று கருதப்படுகிறது.

க்ளீஸே என்றொரு நட்சத்திரம்... 

நமது பூமியிலிருந்து 22 ஒளி வருட தூரத்தில் உள்ளது Gliese 667C என்ற நட்சத்திரம் (இதை இன்னொரு சூரியன் என்றும் சொல்லாம்). இந்த நட்சத்திரத்தை பல ஆண்டுகளாகவே விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந் நிலையில் இந்த நட்சத்திரத்தை 6 கோள்கள் சுற்றி வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

உயிர்கள் வாழ்வதற்கேற்ற தூரத்தில்... 

அதில் 3 கோள்கள் நட்சத்திரத்தில் இருந்து உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சரியான தூரத்தில் சுற்றி வருவது தெரியவந்துள்ளது. அதாவது நமது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தொலைவு மாதிரி. நமது சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கோள்கள் (செவ்வாய், வீனஸ்) சூரியனுக்கு மிக அருகிலும் (மார்ஸ், ஜூபிடர், சனி, யுரேனஸ் உள்ளிட்டவை) மிகத் தொலைவிலும் உள்ளதால் இந்த கிரங்களில் (செவ்வாய், வீனஸ்) தண்ணீரே இல்லை அல்லது மார்ஸ், ஜூபிடர், சனி, யுரேனஸ் உள்ளிட்டவற்றில் தண்ணீர் பயன்படுத்தப்படும் நிலையில் இல்லை, உறைந்து போய் வேறு ரசானங்களுடன் கலந்து போய் இருக்கிறது.

தண்ணீர் இருக்கலாம்... 

ஆனால், இந்த Gliese 667C நட்சத்திரத்தின் 3 கோள்கள் பூமி மாதிரியே சரியான தொலைவில் அதை சுற்றி வந்து கொண்டுள்ளன. இதனால் இங்கு தண்ணீர் இருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தண்ணி மட்டுமா.. உயிர்களும் தான்... 

தண்ணீர் தானே உயிருக்கு அடிப்படை, இதனால் இந்த கிரகங்களில் தண்ணீர் இருந்தால் அங்கு உயிர்களும் கூட இருக்கலாம் என்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள்.

நமது பூமியை விடப் பெரியவை.. 

சிலி நாட்டில் உள்ள ஐரோப்பிய நாடுகள் அமைத்த High Accuracy Radial Velocity Planet Searcher (HARPS), ESO's Very Large Telescope, W.M. Keck Observatory, Magellan Telescopes ஆகிய உலகின் முன்னணி புவியியல் தொலைநோக்கிகள் மூலமாக இந்த நட்சத்திரத்தை ஆய்வாளர்கள் ஆராய்ந்தபோது தான் இந்த விவரங்கள் கிடைத்துள்ளன. இந்த மூன்று புதிய பூமிகளுமே நமது பூமியை விட அளவில் பெரிதாகவும் உள்ளனவாம். எடுறா வண்டிய...!


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!