Tuesday, June 25, 2013

''ரெண்டு பேரும் பிரியப் போறோம்.. தச்சு விட்ருங்க டாக்டர்''

''ரெண்டு பேரும் பிரியப் போறோம்.. தச்சு விட்ருங்க டாக்டர்''


கன்னித்தன்மை மீட்பு அறுவைச் சிகிச்சை இப்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறதாம். ஏராளமான இளம் பெண்கள் இந்த அறுவைச் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களையும், மருத்துவமனைகளையும் நாடி வருவது அதிகரித்துள்ளதாம்.

எல்லாவற்றுக்கும் இப்போது கத்தியை நாட ஆரம்பித்து விட்டார்கள் மக்கள். உடலின் எந்த ஒரு பாகத்தையும் நவீன அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும் என்ற நிலை வந்து விட்டது. முகம் பிடிக்கலையா.. வேறு முகத்தையே மாற்றிக் கொள்ளும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. இந்த நிலையில் மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக உள்ள கன்னித்தன்மை மீட்பு அறுவைச் சிகிச்சை இப்போது இந்தியாவிலும் பரவலாக பிரபலமாகி வருகிறதாம். அகமதாபாத்தில் நடந்த கதையைக் கேளுங்கள்...

பிளாஸ்டிக் சர்ஜனை நாடிய பையனும், பெண்ணும்

அகமதாபாத்தைச் சேர்ந்த டாக்டர் ஹேமந்த் சரையா என்ற பிளாஸ்டிக் சர்ஜனிடம் ஒரு வாலிபனும், இளம் பெண்ணும் வந்தனர். அந்தப் பெண்ணை தனது காதலி என்று அந்தவாலிபர் அறிமுகப்படுத்தினார்.



ஒரு வருடம் உறவு 

தனது காதலியும், தானும் கடந்த ஒரு வருடமாக உடல் ரீதியான உறவில் ஈடுபட்டிருந்ததாகவும், தற்போது இருவரும் வேறு வேறு சாதி என்பதால் திருமணத்திற்கு சிக்கல் எழுந்துள்ளதாகவும், எனவே வேறு வழியில்லாமல் பிரிய முடிவெடுத்திருப்பதாகவும் கூறினார் அந்த வாலிபர்.

ஹைமன்பிளாஸ்டி செய்யனும் 

அப்போது டாக்டர், சரி இப்போது நான் எப்படி உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று டாக்டர் கேட்கவே, அதற்கு அந்த வாலிபர், எனது காதலிக்கு கன்னித்தன்மையை மீட்கும் ஹைமன்பிளாஸ்டி அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்.

ஏன் ஹைமன் பிளாஸ்டி 

ஹைமன் பிளாஸ்டிஎன்பது பெண்கனின் கிழிபட்ட கன்னிச் சவ்வுக்குப் பதில் வேறு சவ்வை அறுவைச் சிகிச்சை மூலம் ஏற்படுத்துவதாகும். இதன் மூலம் அந்தப் பெண் கன்னி கழியாத பெண்ணாக மீண்டும் மாறி விடுவார். இதன் மூலம் அந்தப் பெண்ணை மணக்கும் கணவருக்கு தனது மனைவி கன்னி கழியாத பெண்தான் என்ற எண்ணம் ஏற்படும். இதற்காகத்தான் அந்த வாலிபர், தனது காதலிக்கு ஹைமன்பிளாஸ்டி அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டரிடம் கோரிக்கை வைத்தார்.

இதுதான் முதல் தடவை 

டாக்டர் ஹேமந்த் சரையா கூறுகையில், நான் அந்தப் பையனின் கருத்தை ஆமோதித்தேன், ஆதரவும் தெரிவித்தேன். காரணம், முதலிரவின்போது அந்தப் பெண்ணுக்கு கணவரால் தர்மசங்கடம் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், அந்தப் பெண்ணின் வாழ்க்கை கெட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காகவும். ஆனால் ஒரு காதலன் தனது காதலியைக் கூட்டிவந்து அவருக்கு ஹைமன் பிளாஸ்டி செய்து விடுமாறு கேட்டது என்னைப் பொறுத்தவரை இதுதான் முதல் தடவை என்று கருதுகிறேன் என்றார் டாக்டர் ஹேமந்த்.

நிறையப் பெண்கள் வருகிறார்கள் 

ஹேமந்த் மேலும் கூறுகையில், நிறையப் பெண்கள் ஹைமன்பிளாஸ்டி தொடர்பாக என்னிடம் ஆலோசனை கேட்க வருகிறார்கள். தங்களது தோழிகளுடன்தான் அனைவருமே வருவார்கள். ஆனால் காதலனுடன் வந்த முதல் பெண் இவர்தான்.

திருமணத்திற்கு முன்பு செக்ஸ் சகஜம் 

இப்போதெல்லாம் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வது சகஜமாகி வருகிறது. எனவே பெரும்பாலான ஆண்கள் இப்போதெல்லாம் தங்களது மனைவியர் கன்னித்தன்மையுடன் இருக்கிறார்களா என்பது குறித்துக் கவலைப்படுவதை விட்டு விட்டனர். மிகவும் சிறிய சதவீதத்திலானவர்கள் மட்டுமே அதை உன்னிப்பாக கவனிக்கின்றனர்.

நிறையப் பேர் நாடுகிறார்கள் 

திருமணத்திற்கு முன்பு உறவில் ஈடுபடும் பல பெண்கள், திருமணத்திற்கு முன்பாக ஹைமன்பிளாஸ்டி செய்து கொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். இது சகஜமாகி வருகிறது. ஒருமுறை தனது தாயுடன் வந்திருந்த பெண், ஹைமன்பிளாஸ்டி குறித்து என்னிடம் ஆலோசனை கேட்டுச் சென்றார் என்றார்.

எப்படி செய்கிறார்கள் ஹைமன் பிளாஸ்டி...? 

வெஜைனா எனப்படும் பெண்ணின் பிறப்புறுப்பு சுவரிலிருந்து திசுக்களை எடுத்து, கிழிந்து போன கன்னிச் சவ்வுக்குப் பதில் தைத்து இணைப்பதே ஹைமன்பிளாஸ்டி ஆகும். இது ஒரிஜினல் கன்னிச் சவ்வு போலவே இருக்கும். உடலுறவில் ஈடுபடும்போது இது கிழியும்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!