Tuesday, June 25, 2013

ஃபூ...இது தான் உலகின் விவிஐபி நாய்க்குட்டி... பேஸ்புக்ல 20லட்சம் பாலோயர்ஸ்

ஃபூ...இது தான் உலகின் விவிஐபி நாய்க்குட்டி... பேஸ்புக்ல 20லட்சம் பாலோயர்ஸ்


பேஸ்புக்கில் ஒருவருக்கு 20 லட்சம் பாலோயர்ஸ் இருக்கிறார்கள் என்றால்... அவர் எவ்வளவு பெரிய விவிஐபியாக இருக்க வேண்டும். உண்மையிலேயே இந்த விவிஐபி ஒரு அழகான நாய்க்குட்டி. பெயர் ஃபூ மனியா. இது அமெரிக்காவில் வசித்து வருகிறது. இதன் உரிமையாளரின் பெயர் ஜஸ்டின் பைபர். பொமரேனியன் வகையைச் சேர்ந்த ஃபூமனியா உலகின் மிகப் பிரபலமான நாயாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஃபூ... இவ்வளவுதானா நீனு சொல்லக்கூடாது... 

ஃபூ வுக்கு தற்போது ஏழு வயதாகிறது. அமெரிக்காவின் உத்தியோகபூர்வ செல்லப்பிராணி தொடர்பாளராக பணி புரிகிறது இந்த அழகி.


ஃபூக்கு ஒரு லைக் போடுங்க... 

2009ல் ஃபூவிற்கென தனி பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கப் பட்டது. அதில், ஃபூ க்யூட்டாகச் சிரிக்கும் படங்களும், அது செய்யும் சேட்டைகளின் வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டன.

உலகின் பிரபலமான நாய்...

அன்றிலிருந்து ஃபூ விற்கு லைக்குகளும், பாலோயர்களும் குவிந்த வண்ணம் உள்ளனராம். தற்போது, கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்களைக் கொண்டு, உலகின் மிகப் பிரபலமான நாய் என்ற அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது ஃபூ.


அப்படியா... 

அழகான கூந்தல், குட்டிக் கண்கள் என ஃபூவை பார்த்தாலே கவிதைப்பாடத் தோணும். அவ்வளவு அழகான் ஃபூ முதன் முதலில் கலந்து கொண்டது அசிங்கமான நாய்களுக்கான அழகுப் போட்டியில் தானாம்.

ஏய்... நீ ரொம்ப அழகா இருக்க...

 ஜஸ்டின் பைபர் முயற்சியால் அழகு தேவதையாக மாறியதாம் ஃபூ. விளையாட்டாகத் தான் ஃபூவிற்கு பேஸ்புக் பக்கம் ஆரம்பித்தாராம். ஆனால், ஃபூ இன்று இவ்வளவு பிரபலமாகி விட்டது என ஆச்சர்யம் தெரிவிக்கிறார் ஜஸ்டின்.

இதிலயுமா வதந்தி... 

கடந்த ஏப்ரலில் சில நலம் விரும்பிகள் ஃபூ இறந்து விட்டதாக ட்விட்டரில் செய்தியை பரப்பி விட்டனர். ஆதாரமாக ஃபூ தூஉங்கும் படம் ஒன்றையும் வெளியிட்டனர். இச்செய்தியைப் படித்த அதன் ரசிகர்கள் சோகத்தில் மூழ்க, அடுத்த சில மணி நேரங்களிலேயே ஜஸ்டின் மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஃபூவின் படமொன்றை வெளியிட்டார். அதன் பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டனர் ஃபூ ரசிகர்கள்.


விளம்பர மாடல்... 

உலகின் மிக அழகான, பிரபலமான நாய் -ஃபூ என்ற பெயரில் லீ என்பவர் ஒரு புத்தகமே எழுதியுள்ளார். தனியார் விமானம் ஒன்றின் விளம்பர தூதராகவும் சில காலம் ஃபூ இருந்தது.

பார்றா... 

அழகழகான் உடைகளை மாட்டி ஃபூவை விதவிதமாக படம் பிடித்து, தான் ரசித்ததோடு அதன் ரசிகர்களும் ரசிக்கட்டும் என்று அப்லோட் செய்கிறார் ஜஸ்டின்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!