Tuesday, June 25, 2013

அபார்ட்மென்ட்களில் பொத்தி பொத்தி வைக்கப்படும் குழந்தைகளை நிமோனியா தாக்கும் வாய்ப்பு அதிகம்!!

அபார்ட்மென்ட்களில் பொத்தி பொத்தி வைக்கப்படும் குழந்தைகளை நிமோனியா தாக்கும் வாய்ப்பு அதிகம்!!


நகர்ப்புறங்களில் உள்ள அபார்ட்மென்ட்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு தான் அதிக அளவில் நிமோனியா வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

சீனாவின் நான்ஜிங்கில் உள்ளது ஸ்கூல் ஆப் எனர்ஜி என்று என்விரான்மென்ட். அதைச் சேர்ந்த பேராசிரியர் ஹுவா கியான் மற்றும் அவரது குழுவினர் நகரங்களில் உள்ள பெரிய பெரிய அபார்ட்மென்ட்களில் வாழும் குழந்தைகளுக்கு நிமோனியா ஏற்படுவது குறித்து ஒரு ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நான்ஜிங்கில் உள்ள 11 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது. மாடர்ன் அபார்ட்மென்ட்களில் வீட்டுக்குள்ளேயே வளரும் குழந்தைகளுக்கு நிமோனியா தாக்கும் வாய்ப்பு அதிகம் என்பது தெரிய வந்துள்ளது.


வீட்டுக்குள்ளேயே இருப்பது 

நகரத்தில் உள்ள அபார்ட்மென்ட்டில் வசிக்கும் குழந்தைகளை பெற்றோர் வெளியே சென்று விளையாட விடுவதில்லை. எப்பொழுதும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். போதிய காற்று இல்லாமை, புதிய பர்னிச்சர், சுவரில் தொங்கவிடப்படும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவைக்கும், குழந்தைகளுக்கு நிமோனியா ஏற்படுவதற்கும் தொடர்புள்ளது.


அலர்ஜி 

குடும்ப அலர்ஜி, குழந்தைகளை பெற்றோர் பிறரின் பராமரிப்பில் விடுவது, சுவாச கோளாறுகளாலும் நிமோனியா வருகிறதாம்.


பொத்தி பொத்தி வைப்பது 

கிராமத்து குழந்தைகள் தெருவில் மண்ணில் விளையாடியும், புரண்டு எழுந்தும் ஒன்றும் ஆவதில்லை. ஆனால் சுத்தமான அபார்ட்மென்ட்களில் வாழும் குழந்தைகளுக்கு கிராமத்து குழந்தைகள் போன்று நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதில்லை என்று கூறப்படுகிறது.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!