Tuesday, June 25, 2013

உத்தரகண்டில் வெளுத்து வாங்கும் மழை: 10,000 பேர் தவிப்பு

உத்தரகண்டில் வெளுத்து வாங்கும் மழை: 10,000 பேர் தவிப்பு



உத்தரகண்டில் கன மழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 10,000 பேர் மலைப் பகுதிகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 5,000 பேர் பலியாகியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முதல் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மலைப் பகுதிகளில் சுமார் 10,000 பேர் தங்களை மீட்க ஆளின்றி தவித்து வருகின்றனர்.

விடிய விடிய மழை 

ரிஷிகேஷ், டேராடூன், ஹர்சில், கங்கோத்ரி மற்றும் உத்தரகாசியில் விடிய விடிய மழை பெய்தது.

மேலும் மழை 

அடுத்த 72 முதல் 96 மணிநேரம் வரை உத்தரகண்டில் மேலும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


கேதர்நாத்தில் 3 நாட்களுக்கு மழை 

ஏற்கனவே வெள்ளத்தால் சீர்குலைந்துள்ள கேதர்நாத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பத்ரிநாத்தில் யாத்ரீகர்கள் தவிப்பு 

பத்ரிநாத்திலும் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மலைப் பகுதியில் சிக்கியுள்ள 5,000 யாத்ரீகர்களில் 164 பேர் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஹர்ஷில், மனேரி மற்றும் பத்வாரி பகுதிகளில் இருந்து 830 பேர் தாராசு பகுதிக்கு இடம் பெயர வைக்கப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!