Wednesday, October 3, 2012

டி.வி. ஷோ பாப் ஐடல் போட்டியில் ஆச்சரிய வெற்றி! ஓட்டு போட கடும் பிரசாரம்!!

டி.வி. ஷோ பாப் ஐடல் போட்டியில் ஆச்சரிய வெற்றி! ஓட்டு போட கடும் பிரசாரம்!!




Pop Idol போட்டியின் எட்டு எப்சோட்டுகளும் ஸ்மாஷ் பாடல் ஹிட்டுகள், ஆர்ப்பரிக்கும் கூட்டம் என்று தென்னாபிரிக்காவையே கடந்த சில வாரங்களாக கலக்கிக் கொண்டிருந்த நிலையில், இறுதிப் போட்டி நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. அதில், ஆச்சரிய நபர் ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளர்.

ஆச்சரியத்துக்கு காரணம், முதல் தடவையாக கருப்பு இனத்தவர் ஒருவர் ஜெயித்திருக்கிறார்!

உலகிலேயே இனப் பாகுபாடு அதிகம் காட்டப்படும் நாடு தென்னாபிரிக்காதான். இங்குள்ள வெள்ளை இன மக்கள், கருப்பு இன மக்களை எந்த விதத்திலும் ஜெயிக்க விடுவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு.

பிரிட்டிஷ் பாப் ஐடல் பாணியில் தென்னாபிரிக்க டி.வி. நேனலில் இந்த இசைப் போட்டி தொடங்கப்பட்டது, 2002-ம் ஆண்டில். அன்றில் இருந்து கடந்த வருடம்வரை வெள்ளை இனத்தவர்களே வெற்றி பெற்று வந்தனர்.

போட்டியில் வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பது, டி.வி. ரசிகர்கள்தான். நேற்று முடிவு அறிவிக்கப்பட்ட போட்டிக்காக, ஓட்டு போட்ட ரசிகர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 3 மில்லியன் பேர்!!

25 வயதான கய்யா ம்திதவா என்ற கருப்பு இன ஆண், 23 வயதான மெலிசா அலிசன் என்ற பெண்ணை போட்டியில் ஜெயித்து, Idol South Africa பட்டத்தை ஜெயித்திருக்கிறார். இவர்களில் யாருக்கு ஓட்டுபோட வேண்டும் என்பதற்காக பெரிய அளவில் எஸ்.எம்.எஸ்., மற்றும் இ-மெயில் பிரசாரமும் நடந்தது.

தென்னாபிரிக்காவில் 90 சதவீதம் கருப்பு இன மக்களும், வெறும் 10 சதவீத வெள்ளையின மக்களும் உள்ளனர். ஆனால், பெரிய பண்ணைகள், வர்த்தகங்கள் அனைத்தும் வெள்ளை இனத்தவரின் கைகளில் உள்ளது. Idols South Africa போட்டி, டிவி பே-சேனலில் ஒளிபரப்பானது.

இதில் ஓட்டுபோட பணம் செலுத்த வேண்டும் என்பதால், வசதியான நிலையில் உள்ள வெள்ளை இன மக்களே இதுவரை ஓட்டுப்போட்டு, வெற்றியாளரை தேர்ந்தெடுத்து வந்தனர்.

இம்முறை இது, கிட்டத்தட்ட இனங்களுக்கு இடையிலான பலப் பரீட்சையாக முடிந்தது. வெளிப்படையாகவே தத்தமது இனங்களுக்காக மக்கள் பிரசாரம் செய்தார்கள். முடிவு, கருப்பு இனத்தவருக்கு ஆதரவாக வந்துள்ளது.

நேற்று முழுவதும், ஜொகனாஸ்பர்க் நகரில் விடியவிடிய வீதிகளில் ஒரே வெற்றிவிழா கொண்டாட்டங்களாக இருந்தது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!