Tuesday, October 2, 2012

இந்தியாவில் மிக உயரமான ஏசுநாதர் சிலை கேரளாவில் திறப்பு


இந்தியாவில் மிக உயரமான ஏசுநாதர் சிலை கேரளாவில் திறப்பு




கேரளாவில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் இந்தியாவிலேயே மிக உயரமான ஏசுநாதர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள இந்த ஏசுநாதர் சிலை 33.5 அடி உயரத்தில் வெள்ளை நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பிரபல கலை இயக்குனரும், சிற்பியுமான பிரேமசந்திரன் என்பவர் இந்த சிலையை உருவாக்கி உள்ளார்.

பைபர், மெழுகு உட்பட பல்வேறு பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலையை 35 நாட்களில் 30 தொழிலாளர்கள் துணையுடன் இந்த சிற்பி வடிவமைத்துள்ளார்.

இந்த சிலை 22.5 அடி உயர பீடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை ஆர்ச் பிஷப் மோரான் மார் திறந்து வைத்தார்.

இந்த கல்லூரியில் படித்த மிதுன் என்ற மாணவர் சாலை விபத்தில் பலியானதையடுத்து அவரது பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த ஏசுநாதர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!