Thursday, October 4, 2012

ஐஸ்லாந்திற்கு இடம்பெயர்கிறது விக்கிலீக்ஸ் இரகசியங்களை வெளியிட முடிவு

ஐஸ்லாந்திற்கு இடம்பெயர்கிறது விக்கிலீக்ஸ்: அனைத்து நாடுகளின் இரகசியங்களை வெளியிட முடிவு




அமெரிக்கா தொடர்பான இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையத்தளம், புதிய வடிவில் ஐஸ்லாந்திலிருந்து இயங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரையிலும் அமெரிக்கா தொடர்பான தகவல்களுக்கே முக்கியத்துவம் அளித்து வந்த விக்கிலீக்ஸ், இனிமேல் உலக நாடுகள் முழுவதிலும் கவனம் செலுத்த போவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

ஊடகங்களின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் புதிய சட்டமொன்று சமீபத்தில் ஐஸ்லாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால், விக்கிலீக்ஸ் அங்கு இடம்பெற தீர்மானித்துள்ளது.

இந்த இணையத்தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தற்சமயம் பாலியல் சர்ச்சை குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பதால், பிரிட்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

இதுநாள் வரையிலும் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் தலைமை சுவீடனிலிருந்து இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!