Friday, September 14, 2012

நாயின் நட்பு : நிச்சயம் வாசிங்கள் ஒருமுறை


நாயின் நட்பு : நிச்சயம் வாசிங்கள் ஒருமுறை





நாய் நன்றியுள்ள மிருகம் என்பது அனைவருக்கும் தெரிந்த விடையம். தனது எசமானை பாதுகாக்கும், திருடர்களை துரத்திவிடும் என்று எல்லாம் நாம் படிப்பது உண்டு. சில நாய்கள் அதற்கும் ஒரு படி மேலேபோய் ஆபத்தான சமயங்களில் தனது எசமானைக் காப்பாற்றிய கதைகளும் உண்டு. ஆனால் நீங்கள் இங்கே படிக்கவிருப்பதும் மிகவும் மாறுபட்ட ஒரு உண்மைச் சம்பவம். வாசித்தால் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்கும் அளவுக்கு, இந்த நாயின் நன்றி உணர்வு இருக்கிறது. தமிழர்கள் இதனை ஒரு முறை அழுத்தம் திருத்தமாகப் படிப்பது நல்லது !

ஜேர்மனியில் உள்ள புறநகர்ப் பகுதி ஒன்றில் வசித்துவந்தார் முகுள் குஸ்மான் என்னும் நபர். இவருக்கு ஜேர்மன் ஷப்பர்ட் கப்டன் எனப்படும் (ஒரு வகை இனம்) நாயை அவரது மகன் பரிசளித்தார். அதனை வளர்த்து வந்த குஸ்மான் கடந்த 2006ம் ஆண்டு இறந்துவிட்டார். இதனை அடுத்து அவர் வளர்த்துவந்த நாய் வீட்டை விட்டு வெளியேறிவிட்டது. கப்டன் என்று அழைக்கப்படும் இந்த நாய் வீட்டை விட்டு வெளியேறி எங்கோ சென்று இறந்துவிட்டது என குஸ்மானின் மனைவியும் குடும்பத்தாரும் நினைத்துவிட்டனர். ஆனால் நடந்த விடையம் மனதைத் தைக்கும் விடையமாக உள்ளது ! சில வாரங்கள் கழித்து குஸ்மானின் குடும்பத்தார், குஸ்மானின் கல்லறைக்கு பூ வைத்து அஞ்சலி செலுத்தச் சென்றுள்ளனர். என்ன ஆச்சரியம் ! சவக்காலையில் உள்ள குஸ்மானின் கல்லறைக்கு பக்கத்தில், கப்டன் எனப்படும் அந்த நாய் இருப்பதைக் கண்டு அனைவரும் ஆடிப்போய்விட்டனர் !

குடும்பத்தாரைப் பார்த்த நாய், அவர்களை வாலாட்டி வரவேற்று, அவர்களோடு உறவாடியது. அவர்கள் கண்களில் கண்ணீரைத் தவிர எதனையும் காணமுடியவில்லை. சவக்காலையில் நாய் இருக்கவேண்டாம் எனக் கருதிய அவர்கள் நாயை காரில் ஏற்றிக்கொண்டு தமது வீட்டிற்குச் சென்றுவிட்டனர். அன்று மாலைவரை குஸ்மானின் வீட்டில் இருந்த நாய், மாலை 6 மணிக்கு இருட்ட ஆரம்பித்தவேளை வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்று, அவரது கல்லறையை அடைந்து அங்கே தங்கிவிட்டது. மீண்டும் மறுநாள் அவர்கள் சென்று யாயைக் கூட்டிவந்தார்கள். முதல் நாள் போலவே மாலைவரை வீட்டில் இருந்த நாய், பின்னர் புறப்பட்டு சவக்காலை சென்றுவிட்டது. இதனைக் கவனித்த குடும்பத்தாருக்கு ஒருவிடையம் நன்றாகப் புரிந்துவிட்டது. அது எக்காரணம் கொண்டும், குஸ்மானை இரவில் தனியாக இருக்க விடாது. அவர் உயிரோடு இருக்கும்வரை அவரை அது இரவில் பாதுகாத்து வந்தது. அதேபோல இறந்த பின்னரும் அந்த நாய் அவரை இரவில் விட்டுவிட்டு வர விரும்பவில்லை !

2006 முதல் இன்றுவரை, அதாவது 6 வருடமாக அந்த நாய், அவரது கல்லறைக்கு பக்கத்திலேயே இருக்கிறது. இதனைப் பார்த்த சவக்காலைக்கு அருக்கில் உள்ள மக்கள் அதற்கு சாப்பாடு வழங்கி வருகின்றனர். சிலர் போர்வைகளால் போர்த்து அதனை குளிரில் இருந்து பாதுகாத்து வருகின்றனர். கடும் குழிர், மழை, பனிப் பொழிவு என்ன கால நிலை இருந்தாலும் அது தனது எசமானின் கல்லறையைச் சுற்றி வருகிறது. அதனை அது பாதுகாத்தும் வருகிறது. இதில் விநோதம் என்னவென்றால், குஸ்மான் இறந்தபின்னர், அவரது உடலை குறிப்பிட்ட சவக்காலையில் அடக்கம் செய்ய, உறவினர்கள் சென்றவேளை இந்த நாயை அவர்கள், தமது மற்றுமொரு உறவினர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். எனவே குஸ்மானின் உடல் எந்த சவக்காலையில் புதைக்கப்பட்டது என்பது இந்த நாய்க்குத் தெரியாது. ஆனால் எப்படி அது அதனைத் தேடிக் கண்டுபிடித்தது என்பதுதான் பெரிய அதிசயம் என்கிறார்கள் மக்கள்.

இதேபோல பிறிதொரு சம்பவம் டோக்கியோவிலும் பதிவாகியுள்ளது. ஜப்பானில் உள்ள நபர் ஒருவர் ஒரு நாயை வளர்த்து வந்தார். அவர் வேலைசென்று திரும்பும்போது, ஒவர் நாளும் அந்த நாய் அவரை ரயில்வே நிலையம் சென்று வரவேற்கும். ஒரு நாள் அவர் வேலை இடத்திலேயே இறந்துவிட்டார். அன்று அவர் ரயில்வே நிலையம் வரவில்லை. ஆனால் அந்த நாய் சுமார் 8 ஆண்டுகளாக ஒவர் நாளும் குறிப்பிட்ட நேரத்துக்குப் போய் எசமான் வருவார் எனக் காத்திருக்குமாம். பின்னர் ஒரு நாள் அது ரயில்வே நிலையத்திலேயே இறந்தும் விட்டது.

இச் செய்தி இன்று பிரித்தானியா முதல் உலகளாவிய ரீதியில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. இச் செய்தியை வாசித்து நான் அழுதுவிட்டேன் என்று பலர் காமென்ஸ் எழுதி, இந்த நாயை ஒரு நட்பின் அடையாளமாக, உண்மையான விசுவாசியாகப் பார்கிறார்கள். நம்பில் எத்தனைபேர் நட்பை மதிக்கிறார்கள். உதவிபுரிந்தவர்களுக்கு விசுவாசியாக உள்ளார்கள் ? ஒரு நாய்க்கு இருக்கும் அறிவு கூடவா எமக்கு இல்லை என்று மனித குலம் வெட்க்கி நாணும் அளவுக்கு இந்த நாய் உயர்ந்து நிற்கிறது.








No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!