Tuesday, September 11, 2012

கனடாவில் அதிவேகத்துடன் வீசிய புயல் காற்று


கனடாவில் அதிவேகத்துடன் வீசிய புயல் காற்று





கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள டுரூமோண்ட்வில்லை என்ற பகுதியை கடந்த 8ஆம் திகதி புயல் தாக்கியதாக கனடாவில் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

புயல் காற்றின் காரணமாக பெருமழை பொழிந்தது. இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்தன, ஆயிரக்கணக்கானோர் வீடிழந்தனர்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 90,000 வீடுகளும், கடைகளும் இருளில் மூழ்கின.

இந்தப் புயல் தாழ்ந்த பகுதிகளை விட உயர்ந்த பகுதிகளில் அதிவேகத்துடன் வீசியது. மணிக்கு 120 கி.மீ வேகத்தில் புயல் அடித்தது. இந்தப் புயல் வருவதற்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், ஏராளமான சேதம் தடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!