Monday, January 6, 2014

துபாயில் வீடு வாங்கினால் லம்போகினி கார் இனாம்! அருகே உள்ள நங்கை எந்த கணக்கு?

துபாயில் வீடு வாங்கினால் லம்போகினி கார் இனாம்! அருகே உள்ள நங்கை எந்த கணக்கு?




வசிப்பதற்கு ஒரு அட்டகாசமான பெந்த்ஹவுஸ் வாங்கும் திட்டம் உங்களுக்கு உள்ளதா? அதை அந்தப் பக்கம் வைத்துக் கொள்ளுங்கள் வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம்… ஒரு லம்போகினி ஆடம்பர கார் வாங்கும் பிளான் உள்ளதா? அதை, இந்தப் பக்கம் வைத்துக் கொள்ளுங்கள்.

மூன்றாவது கேள்வி, சின்ன வயதில் மாங்காய்க்கு கல் எறிந்திருக்கிறீர்களா? ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்தீர்களா?

இல்லை என்றால் கவலை வேண்டாம். இப்போது ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். ஆனால் அதற்கு நீங்கள் துபாய் போக வேண்டியிருக்கும்! (ஏங்க.. போகுமிடம் துபாய். ஜாக்கிரதையாக மாங்காயை மட்டும் அடியுங்க. மாங்கனி கன்னத்தை பார்த்து கண் அடித்தால், கல்லால் அடித்து கொல்லும் தண்டனை இன்னமும் இருக்கிறதாம்)

ஒரு கல் – ரெண்டு மாங்காய் டீல் என்ன?

தமாக் பெந்த்ஹவுஸ் (Damac penthouse) வீடு வாங்கும் கஸ்டமர்களுக்கு, புத்தம் புதிய லம்போகினி கார் இனாமாக கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளது ஒரு நிறுவனம்! துபாய் ஷாப்பிங் திருவிழாவுக்காக தமாக் ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அதற்காக, வீடு வாங்கும் ஆட்களின் பெயர்கள் எல்லாவற்றையும் சீட்டில் எழுதி, குலுக்கிப்போட்டு, அதிஷ்டசாலியாக சித்தப்பாவின் பெயரை எடுக்கும் லோக்கல் கேம் அல்ல இது. வீடு வாங்கும் அனைவருக்கும் கார் இனாம் என்று அறிவித்துள்ளார்கள்.

இந்த டீலில் ஒரேயொரு கேட்ச், பெரிய வீடுகள் வாங்கும் நபர்களுக்கு மட்டுமே, லம்போகினி கார் கொடுப்பார்களாம். மற்றையவர்களுக்கு என்ன,  மந்தாகினியா?

சேச்சே, சிறிய சைஸ் வீடுகள் வாங்கினாலும் கார் இனாம் உண்டு. BMW அல்லது மினி கூப்பர் கார் கிடைக்கும் என அறிவித்துள்ளது ரியல் எஸ்டேட் நிறுவனம்!

லம்போகினி கார் சூப்பராக உள்ளதை, மேலேயுள்ள போட்டோவில் பார்த்திருப்பீர்கள். அந்த போட்டோ, துபாயில் கார் கொடுக்கும் தமாக் ரியல் எஸ்டேட் நிறுவனம் வெளியிட்ட போட்டோ அல்ல. “கார் மட்டும்தான் கொடுக்கிறார்கள், அப்புறம் எதற்காக அம்மிணி போட்டோவையும் மேலே போட்டிருக்கிறீர்கள்?” என்று நீங்கள் எம்முடன் சண்டைக்கு வந்தால்,  அதற்கும் ஒரு பதில் எம்மிடம் உள்ளது.

துபாயில் கார் கொடுக்கும் தமாக் ரியல் எஸ்டேட் நிறுவனம் இலவச கார் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பிலும் ஒரு அம்மிணியின் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை 5-வது போட்டோவில் பார்க்கவும்.

நாங்களாவது பரவாயில்லை, அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் காரைவிட நங்கையின் போட்டோ பெரிதாக இருக்கிறது! (வீடு வாங்கினால் இனாம், நங்கையா? காரா? என்ற சந்தேகம் எழுவதை தடுக்க முடியாது)

துபாய் நிறுவனம் வெளியிட்டுள்ள சில போட்டோக்களை இணைத்துள்ளோம். முதலில் அவர்கள் இனாமாக கொடுக்கும் காரின் போட்டோக்களை பாருங்கள்… அதன்பின், அந்த காரை இனாமாக பெற, நீங்கள் பணம் கொடுத்து வாங்க வேண்டிய வீட்டின் போட்டோக்களை பாருங்கள்.

இதுதான் நாம் போட்ட போட்டோ வரிசை. இந்த போட்டோ வரிசையை  எப்போது மாற்ற வேண்டும் தெரியுமா?

ஒருவேளை போட்டோக்களை பார்த்துவிட்டு வாங்கும் ஆசை ஏற்பட்டு, அதற்காக சம்சாரத்திடம் அனுமதியும் பெற வேண்டிய கட்டாயம் இருந்தால்… எமது ஆலோசனை, சம்சாரத்திடம் முதலில் வீட்டின் போட்டோக்களை காட்டுங்கள்…  அப்புறம் காரின் போட்டோக்கள்…  அம்மிணியின் போட்டோ வேண்டாம்!









No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!