Monday, January 6, 2014

“செவ்வாய் கிரகத்தில் இருப்பதைவிட இன்று இங்கு குளிர் அதிகம்” மிரளும் அமெரிக்கர்கள்!

“செவ்வாய் கிரகத்தில் இருப்பதைவிட இன்று இங்கு குளிர் அதிகம்” மிரளும் அமெரிக்கர்கள்!




“காலநிலை அறிவிப்பின்போது பொதுவாக நாம், ‘உயிர் அச்சுறுத்தல்’ (‘life threatening’) என்ற சொற்பதத்தை பயன்படுத்துவதில்லை. ஆனால், ஆம்.. தற்போது ஏற்பட்டுள்ளது ‘உயிர் அச்சுறுத்தல்’ என்ற நிலைமைதான்” என்கிறார், கென் சிமெஸ்கோ. இவர் அமெரிக்கா பிஸ்மார்ச் பகுதியை சேர்ந்த meteorologist.

“தற்போது வெளியே உள்ள மைனஸ்-50 டிகிரி குளிரில் உடலின் பாகங்கள் ஏதாவது தொடர்ந்து 5 நிமிடங்கள் தெரியும்படி நின்றிருந்தாலே, தோலில் frostbite ஏற்பட தொடங்கும். அந்த உடல் பகுதி தொடர்ந்து குளிரில் எக்ஸ்போஸ் செய்யப்பட்டால், மயக்கமடைந்து விழுவதுடன், உயிராபத்தும் ஏற்படலாம். அதுதான் காலநிலை அறிவிப்பில் ‘உயிர் அச்சுறுத்தல்’ என்ற எச்சரிக்கை செய்யப்படுகிறது” என்கிறார் கென்.

கடந்த இரு தினங்களாக கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் கடும் மோசமான காலநிலை காணப்படுகிறது. குளிர் என்றால், உங்கவீட்டு குளிர், எங்க வீட்டு குளிர் அல்ல, நிஜமாகவே கிடுகிடுக்க வைக்கும் குளிர்.

அமெரிக்கர்களுக்கு இதில் கடும் கோபம் என்னவென்றால், கனடாவின் மத்திய பகுதியில் ஆரம்பித்த குளிர்தான் படர்ந்து, அமெரிக்காவின் சில பகுதிகளையும் தாக்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான்! கனடாவின் கியுபக் பகுதிகளில் நேற்று முதலே வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று தொடர்ந்து அறிவித்தபடி உள்ளார்கள்.

கனடா, டொரண்டோவில் வீதிகளில் கொட்டியிருந்த பனி தொடர்ந்து அகற்றப்பட்ட வண்ணம் உள்ள நிலையிலும், அதன்மேல் செல்லும் வாகனங்களின் அழுத்தம் காரணமாக வீதிகளில் பனி அழுந்தி கெட்டி ஐஸாக மாறிக்கொண்டு இருக்கிறது. இதில் வாகனங்கள் அதிகம் சறுக்க தொடங்குகின்றன.

கிழக்கு கனடாவில் உள்ளவர்களுக்கு இது ஓரளவு பரிச்சயமான காலநிலைதான் என்ன போதிலும், கடந்த பல ஆண்டுகளாக இந்தளவு மோசமான அளவுக்கு சென்றதில்லை. குளிரில் சடுகுடு விளையாடும் கனேடியர்களுக்கே இப்படி என்றால், அமெரிக்கர்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவார்கள் என்று யோசித்து பாருங்கள்.

அதுதான், அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில், ‘உயிர் அச்சுறுத்தல்’ அறிவிப்பை விடுத்துவிட்டு மிரண்டுபோய் உள்ளார்கள்! அமெரிக்க டி.வி. சேனல் ஒன்று, “செவ்வாய் கிரகத்தில் இருப்பதைவிட இன்று இங்கு குளிர் அதிகம்” என்று மிரட்டுகிறது.

அமெரிக்காவின் வடக்கு டகோட்டா பகுதிகளில் காற்றுடன் சேர்ந்த குளிர் (wind chill factor) இன்றிரவு மைனஸ் 60 வரை போகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சனி ஞாயிறு தினங்களில் மத்திய கனடா, வடகிழக்கு அமெரிக்காவில் மற்றொரு பனிப்புயல் எதிர்பார்க்கப்படுகிறது. 6 முதல் 12 அங்குல பனிப்பொழிவு இருக்குமாம்.

நீங்கள் வட அமெரிக்காவுக்கு (கனடா, அமெரிக்கா) வெளியே வசிப்பவராக இருந்தால், நம்மூரில் நிலைமை எப்படி என்று பார்க்க ஆவல் உள்ளவர்களாக இருப்பீர்கள் அல்லவா? இதோ, நேற்று எடுக்கப்பட்ட சில போட்டோக்களை இணைத்துள்ளோம். 



















No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!