Tuesday, April 16, 2013

டொரன்டோவில் வானத்தில் இருந்து கொட்டுகின்றன பனிக்கட்டிகள்!

எச்சரிக்கை: டொரன்டோவில் வானத்தில் இருந்து கொட்டுகின்றன பனிக்கட்டிகள்!


ரொறொன்ரோவில் இன்று பனிக்கட்டிகளுடன் கூடிய கனமழை பெய்யும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது. பயங்கர இடி, மின்னலுடன் 6 அங்குலம் அளவிற்கான பனிக்கட்டிகளும் சாலைகளில் குவியக் கூடும் என்பதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மழைப்பொழிவு நாளையும் நீடிக்கும் என்பதால் அவசியமில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தெற்கு ஒன்றோரியப் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் திடிரென வீசிய காற்றினால் சாலைகளில் ஆங்கங்கே மின் கம்பங்கள் அறுந்து கிடப்பதுடன் அவற்றை பனியும் மூடியுள்ளதால் மறு சீரமைப்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் உண்டான காற்றழுத்த தாழ்வு நிலை வட மேற்கில் நகர்ந்து தற்போது ரொறொன்ரோவில் மையம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!