Tuesday, April 16, 2013

குஜராத் சிங்கங்களை ம.பி.க்கு மாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி

குஜராத் சிங்கங்களை ம.பி.க்கு மாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி


குஜராத் கிர் தேசிய பூங்காவில் உள்ள சிங்கங்களை, மத்தியப் பிரதேசத்தின் பல்பர் குனோ சரணாலயத்துக்கு 6 மாதங்களுக்குள் மாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் 400 ஆசிய சிங்கங்கள் உள்ளன. இங்கு சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அவற்றை பாதுகாக்க மத்தியப் பிரதேசத்தில் உள்ள பல்பர் குனோ சரணாலயத்துக்கு மாற்ற வேண்டும் என பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பல்பர் குனோ சரணாலயத்தில் பாதுகாப்பான சூழ்நிலை நிலவுவதால், சிங்கங்களை மத்திய பிரதேசத்துக்கு மாற்ற வேண்டும் என மாநில அரசும் வேண்டுகோள் விடுத்தது. இதற்கு குஜராத் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய பிரதேசத்தின் பன்னா வனப் பகுதியில் உள்ள புலிகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. அதனால் குஜராத்தில் உள்ள சிங்கங்களை மத்தியப் பிரதேசத்துக்கு மாற்றுவது பாதுகாப்பனது அல்ல என்ன குஜராத் கூறியது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘‘குஜராத் வனப் பகுதியில் சிங்கங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அதற்கு மாற்று இடம் தேவைப்படுகிறது. சிங்கங்களை குஜராத்திலிருந்து, மத்திய பிரதேசத்துக்கு 6 மாதங்களுக்குள் மாற்ற வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய வனப் பகுதியில் அழிந்து வரும் நிலையில் உள்ள காட்டெருமை உள்ள சில விலங்குகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’’ என்றனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!