Sunday, April 21, 2013

லுஃப்தான்சா விமானங்கள் நாளை பறக்காது! அடுத்த சில தினங்களுக்கு தவிர்ப்பது நல்லது!!


லுஃப்தான்சா விமானங்கள் நாளை பறக்காது! அடுத்த சில தினங்களுக்கு தவிர்ப்பது நல்லது!!



ஜெர்மன் விமான நிறுவனம் லுஃப்தான்சா, நாளை (திங்கட்கிழமை) தமது அநேக விமான சேவைகளை கேன்சல் செய்வதாக அறிவித்துள்ளது. விமான நிறுவன ஊழியர்கள் நாளை ஒருநாள் ‘எச்சரிக்கை வேலைநிறுத்தத்தில்’ ஈடுபட உள்ள காரணத்தாலேயே, விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

லுஃப்தான்சா விமான நிறுவன தரை ஊழியர்கள் (ground staff) தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது. அடுத்த ஆண்டு 5.2 சதவீத ஊதிய உயர்வு, மற்றும் பணி நிரந்தர வாக்குறுதிகளை கோரியுள்ளது தொழிற்சங்கம்.

இந்த கோரிக்கைக்கு நிர்வாகம் சம்மதிக்கவில்லை. அதையடுத்து நாளை ‘எச்சரிக்கை வேலைநிறுத்தம்’ நடைபெறுகிறது. அதன் பின்னரும் நிர்வாகம் இணங்கி வராவிட்டால், நிரந்தர வேலை நிறுத்தம் அறிவிக்கப்படும் என தொழிற்சங்கம் கூறியுள்ளது.

நாளை ஜெர்மனியின் ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் இருந்து செல்லவேண்டிய 1650 ஐரோப்பிய விமான சேவைகளில் வெறும் 20 சேவைகளும், 50 சர்வதேச விமான சேவைகளில் 6 சேவைகளும் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகூட நாளை ரத்து செய்யப்படலாம் என்று தெரிகிறது.

அடுத்த சில தினங்களுக்கு லுஃப்தான்சாவை தவிர்ப்பது நல்லது.





No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!